Home /News /trend /

பார்வையற்றோருக்கு உதவும் வகையில் ஸ்மார்ட் ஷூக்களை வடிவமைத்துள்ள பள்ளி மாணவர்

பார்வையற்றோருக்கு உதவும் வகையில் ஸ்மார்ட் ஷூக்களை வடிவமைத்துள்ள பள்ளி மாணவர்

ஸ்மார்ட் ஷூ

ஸ்மார்ட் ஷூ

ரோலண்ட்ஸ் மெமோரியல் உயர்நிலை பள்ளியில் (Rowland’s Memorial High School) 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரான அன்குரித் கர்மாகர் (Ankurit Karmakar) பார்வையற்றோருக்குப் பெரிதும் உதவ கூடிய வகையில் இந்த ஸ்மார்ட் ஷூவை உருவாக்கி உள்ளார்.

பார்வையற்றோருக்கு உதவும் வகையில், அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் (Karimganj) மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், சென்சார் வசதி கொண்ட ஸ்மார்ட் ஷூவை வடிவமைத்து அசத்தி இருக்கின்றார்.

ரோலண்ட்ஸ் மெமோரியல் உயர்நிலை பள்ளியில் (Rowland’s Memorial High School) 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரான அன்குரித் கர்மாகர் (Ankurit Karmakar) பார்வையற்றோருக்குப் பெரிதும் உதவ கூடிய வகையில் இந்த ஸ்மார்ட் ஷூவை உருவாக்கி உள்ளார். பார்வை அற்றவர்களுக்கான தனது பிரத்யேக கண்டுபிடிப்பு பற்றி கூறி இருக்கும் பள்ளி சிறுவன் அன்குரித் கர்மாகர், " கண் தெரியாதவர்களுக்காக இந்த ஸ்மார்ட் ஷூவை உருவாக்கி உள்ளேன். பார்வையற்றவர்கள் நடந்து செல்லும் வழியில் தடைகள் இருந்து அதனால் இடையூறு ஏற்பட்டால், ஷூவில் கொடுக்கப்பட்டிருக்கும் சென்சார் அந்த தடையை கண்டறிந்து buzzer சவுண்ட் எச்சரிக்கை கொடுக்கும். ஷூவில் ஒரு buzzer உள்ளது. சென்சர் தடையை கண்டறிந்து buzzer-லிருந்து எச்சரிக்கை சத்தம் ஒலிக்கும் போது ஸ்மார்ட் ஷூவை அணிந்திருக்கும் பார்வையற்றவர் அதை கேட்க முடியும்.

இதனை தொடர்ந்து அலர்ட்டாகி தடையை தவிர்ப்பதற்கேற்ப விழிப்புடன் செயல்பட முடியும். இந்த ஸ்மார்ட் ஷூவில் உள்ள சென்சார் டிவைஸ் 5 மீட்டர் வரம்பில் உள்ள எந்தப் பொருளையும் கண்டறிந்து, பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு வழியில் ஏற்படும் தடைகள் குறித்து எச்சரிக்கும். மேலும் இந்த ஷூ பார்வையற்றோர் மூங்கில் குச்சிகளை வைத்து கொண்டு நடப்பதை மாற்றும். எதிலும் மோதி கொள்ளாமல் அல்லது தடுமாறாமல் நடக்க உதவும்" என்றார். இது போன்ற யோசனை எப்படி தனக்கு வந்தது என்பதையும் மாணவர் அன்குரித் கர்மாகர் விளக்கி இருக்கிறார். கிரேட் பிரிட்டனை சேர்ந்த ஒருவரால் தான் பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஷூவை டிசைன் செய்ய தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாகவும், ஏனென்றால் அந்த நபர் இதே போன்ற ஒரு வகையான ஷூவை உருவாக்கியதாகவும் கர்மாகர் கூறி உள்ளார்.

Also read... இண்டிகோ விமனாத்தில் பையை தொலைத்த நபர்.... கண்டுபிடிக்க செய்த செயலால் அதிர்ச்சி

இந்த ஸ்மார்ட் ஷூவை உருவாக்கி உள்ளது பற்றி மேலும் பேசிய அன்குரிட் தனது அறிவின் ஒரே ஆதாரம் யூடியூப் தான் என்று கூறி உள்ளார். தந்தையின் ஸ்மார்ட் போனில் டுடோரியல் வீடியோக்களை பார்த்து அறிவை வளர்த்து கொண்டதன் மூலம் இந்த ஸ்மார்ட் ஷூவை தயாரித்துள்ளார். தனது இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் அன்குரித் கர்மாகர், விஞ்ஞானி ஆவதே எனது நோக்கம். மக்களுக்கு உதவும்மற்றும் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் இதுபோன்ற கண்டுபிடிப்புகளை தொடர்ந்து நான் செய்வேன் என்று கூறி இருக்கிறார்.

பார்வையற்றோர் நடக்கும் போது ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் வகையில் ஸ்மார்ட் ஷூவை வடிவமைத்துள்ள அன்குரித் கர்மாகருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஷூ-வின் விலையை தவிர்த்து டிவைஸின் உற்பத்திச் செலவு சுமார் ரூ. 2000 ஆக இருப்பதாக கூறி இருக்கும் மாணவர், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்தலாம் மற்றும் ரேஞ்சை மாற்றியமைக்க முடியும். மொத்தமாக உற்பத்தி செய்தால் செலவும் குறையும் என்று கூறி உள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Shoe, Trending

அடுத்த செய்தி