ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

என்னுடைய இறப்பு சான்றிதழை காணவில்லை.. கண்டுபிடித்து கொடுங்கள் என விளம்பரம் வெளியிட்ட நபர்

என்னுடைய இறப்பு சான்றிதழை காணவில்லை.. கண்டுபிடித்து கொடுங்கள் என விளம்பரம் வெளியிட்ட நபர்

என்னுடைய இறப்பு சான்றிதழை காணவில்லை.. விளம்பரம் வெளியிட்ட நபர்

என்னுடைய இறப்பு சான்றிதழை காணவில்லை.. விளம்பரம் வெளியிட்ட நபர்

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கல்வி சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை நாம் எங்காவது எடுத்து செல்லும்போது தவறுதலாக தொலைத்து விட்டால் என்ன செய்வோம்? அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு புகாரை பதிவு செய்து விட்டு, ”இந்த தேதியில் என்னுடைய ஆவணம் காணாமல் போய்விட்டது, என்னுடைய விவரம் இது, ஆவணத்தை கண்டெடுப்பவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்’’ என்று விளம்பரம் கொடுப்போம்.

  இந்த மாதிரியாக விளம்பரம் கொடுத்தவுடன் ஒரு சிலருக்கு சான்றிதழ் திரும்பக் கிடைத்து விடும். சிலருக்கு கிடைக்காமலே போயிருக்கிறது. ஆனால், முக்கியமான விஷயம் என்னவென்றால் சான்றிதழுக்கு உரிய நபருக்கு அது சென்று சேர வேண்டும்.

  ஆனால், நாளிதழ் ஒன்றில் தற்போது இதேபோல சான்றிதழை காணவில்லை என்று வெளியாகியுள்ள விளம்பரம் ஒன்று பெரும் மிகுந்த நகைச்சுவையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  நாளிதழில் வெளியாகியுள்ள விளம்பரத்தில் ரஞ்சித் குமார் என்பவரின் இறப்புச் சான்றிதழ் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலென்ன ஆச்சரியம் இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா? ரஞ்சித் குமாருக்கும், எனக்கும் இதுதான் உறவு, அவரது இறப்புச் சான்றிதழை நான் தொலைத்து விட்டேன் என்று வேறொரு நபரின் பெயரில் அந்த விளம்பரம் வந்திருந்தால் ஒரு சிக்கலும் இல்லை.

  Also Read : கார் விலையே ரூ.11 லட்சம்தான்.. சர்வீஸ் பாக்க ரூ.22 லட்சமா? பெங்களூருவில் நடந்த சம்பவம்

  ஆனால், “ரஞ்சித் குமார் ஆகிய நான் என்னுடைய இறப்புச் சான்றிதழை லம்டிங் பஜார் பகுதியில் கடந்த 07/09/2022 அன்று காலை 10 மணியளவில் தொலைத்துவிட்டேன்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இறப்புச் சான்றின் பதிவு எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

  ஐஏஎஸ் அதிகாரி ரூபின் சர்மா, இந்த விளம்பர நகலை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் சாத்தியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  இந்த பதிவு தற்போது டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. குறிப்பாக, தமிழ் சினிமா ஒன்றில் என் கிணறை காணவில்லை என்று காவல் துறையிடம் நடிகர் வடிவேலு புகார் அளிப்பார். அதை நினைவூட்டுவதைப் போல இந்த விசித்திர விளம்பரம் அமைந்துள்ளது.

  ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் :

  இறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டது என்றே வைத்துக் கொண்டாலும், அது திரும்ப கிடைத்தவுடன் எங்கு கொண்டு வந்து தர வேண்டும், சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர். திரைப்படங்களில் காட்டப்படும் டைம் டிராவல் உண்மையில் நடக்கத் தொடங்கியுள்ளதாக மற்றொரு பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

  இறப்புச் சான்றிதழ் இல்லாமல் இந்த நபருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, அதனை பெற்றுக் கொள்வதற்காக அவர் மீண்டும் இங்கு வரக் கூடும் என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral