முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / போதை பழக்கத்தை கைவிட ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட நபருக்கு நேர்ந்த விபரீதம்

போதை பழக்கத்தை கைவிட ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட நபருக்கு நேர்ந்த விபரீதம்

போதை பழக்கத்தை கைவிட ஆணுறுப்பை அறுத்த கொண்ட நபருக்கு நேர்ந்த விபரீதம்

போதை பழக்கத்தை கைவிட ஆணுறுப்பை அறுத்த கொண்ட நபருக்கு நேர்ந்த விபரீதம்

கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்கள் தன்னிலை மறந்து, இயல்புக்கு மாறான செயல்களை சர்வ சாதாரணமாக செய்யத் தொடங்கி விடுவார்கள்.

“புகைப்பிடிப்பது உடலுக்கு கேடு தரும் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும்’’, “மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு’’ என்று புகையிலை, சிகரெட், மது மற்றும் இதர போதை வஸ்துகளுக்கு எதிராக எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு வாசகங்களை நிறைய முறை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இவற்றை பயன்படுத்தினால், நிச்சயமாக ஒருநாள் உடல்நலம் பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

அதேபோன்று, நீடித்த போதைப் பழக்கம் சிலருக்கு மனநலனையும் கூட பாதிக்கும். இவர்களால் திடமான முடிவுகளை எடுக்க முடியாது. குழப்பமான சூழலில் காணப்படுவார்கள். குறிப்பாக, கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்கள் தன்னிலை மறந்து, இயல்புக்கு மாறான செயல்களை சர்வ சாதாரணமாக செய்யத் தொடங்கி விடுவார்கள். சில சமயம், அது விபரீதத்திலும் சென்று முடிவதுண்டு.

அஸ்ஸாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள எம்டி சஹாஜுல் அலி என்ற இளைஞர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர். குறிப்பாக, கஞ்சா பழக்கத்தால் சைக்கோ நிலைக்கு சென்று விட்டார்.

கஞ்சா மட்டுமல்லாமல் இதர போதை வஸ்துகளையும் சஹாஜுல் அலி பயன்படுத்தி வந்தார். இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் எவ்வளவோ முயற்சி செய்தும், பலன் கிடைக்கவில்லை. குறிப்பாக, போதைப் பொருள் பயன்பாடு என்பது தங்கள் மத வழக்கப்படி பாவ காரியம் என்று அவர் கருதினார். இத்தகைய சூழலில், கஞ்சா புகைத்ததால், தனக்கு தானே தண்டனை அளித்துக் கொள்ள முடிவு செய்த சஹாஜுல் அலி, தனது ஆணுறுப்பை தானே அறுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

Also Read : இந்த படத்தில் முதலில் என்ன தெரிகிறதோ அதை பொறுத்து உங்கள் குணாதிசயம் வெளிப்படும்!

ஆணுறுப்பை அறுத்துக் கொண்டது ஏன் என்பது குறித்து ஊடகம் ஒன்றுக்கு சஹாஜுல் அலி பேட்டி கொடுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் கஞ்சா பயன்படுத்துவதை எங்கள் மதம் அனுமதிக்காது. நான் அதை புகைத்த பிறகு, சமுதாயத்தில் ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்று நான் கவலை அடைந்தேன். என் செயலுக்கு தண்டனை வழங்கிக் கொள்ளவும், நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவும் ஆணுறுப்பை அறுத்துக் கொண்டேன். ஆணுறுப்பை அறுத்த பிறகு நான் உயிர் பிழைத்தால், இனி அதுபோன்ற காரியங்களை நான் செய்ய மாட்டேன் என நினைத்துக் கொண்டேன்’’ என்று கூறினார்.

போதைப் பொருளை கைவிட வேண்டும் என்ற நோக்கத்தில், இதுபோன்ற அசாதாரணமான செயலை சஹாஜுல் அலி செய்வது முதல்முறை அல்ல என்று அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2003ஆம் ஆண்டில் இரவு முழுவதும் சிங்கம் ஒன்றுடன் அவர் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவரும், கஞ்சா புகைத்ததற்காக தனது ஆணுறுப்பை முழுவதுமாக வெட்டிக் கொண்டார்.

First published:

Tags: Quit Smoking, Smoking