சல்மான்கான் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு... சுறா பட பாணியில் ஒரு சுவாரஸ்யம்!

Web Desk | news18
Updated: August 8, 2019, 8:46 PM IST
சல்மான்கான் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு... சுறா பட பாணியில் ஒரு சுவாரஸ்யம்!
சல்மான் கான்
Web Desk | news18
Updated: August 8, 2019, 8:46 PM IST
சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அஸ்ஸாம் குடும்பம் ஒன்று, சல்மான் கான் பற்றி துப்பு கொடுத்தால் பரிசளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

நிச்சயம் நாம் எல்லாரும் நினைப்பது போல பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் பற்றி துப்புகொடுப்பதற்காக பரிசு அல்ல. அது ஒரு அழகான ஆடு. அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் ககோபத்தர் கிராமத்தைச் சேர்ந்த குலாம் மன்சூரி குடும்பத்துக்கு சொந்தமானது தான் அந்த அழகிய ஆடு.

அந்த ஆடு காணாமல் போன நிலையில் அதனைத் தேட எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், ஆடு பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இதுகுறித்து அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சமூகவலைதளத்திலும் பதிவு செய்துள்ளார்.



அதில், நாங்கள் அந்த ஆட்டை தபங் சல்மன் கான் என்று தான் ஆசையோடு அழைப்போம். அதன் செல்லப்பெயர் சோனு. அது எங்கள் குடும்பத்தில் ஒன்றாகவே கலந்துவிட்டது. அது எனது சகோதரர்போல. அது சுமார் 40 கிலோ எடையுடன் இருக்கும். நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறோம். என் பெற்றோர் சாப்பாடு கூட சாப்பிடாமல் மனம் கலங்கி இருக்கிறார்கள்.

எங்கள் வீட்டுப் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்த சோனுவைக் காணாமல் ஏங்கிப் போய்விட்டனர்” என்றும் பதுவிட்டுள்ளார்.

தகவல் தெரிவித்தால் ரூ.7000 முதல் ரூ. 10000 வரை ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வை அசைபோட்டுப் பார்த்தால் சுறா படத்தில் தமன்னாவின் நாய்க்கு ரமேஷ் என்று பெயரிட்டிருக்கும் காட்சி தான் நினைவுக்கு வருகிறது.

படிக்க: மீண்டும் அஜித்துக்கு வில்லனாகும் அருண் விஜய்!



வீடியோ பார்க்க: அஜித் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம்

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...