Home /News /trend /

எல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனா ரம்பா எங்க சார்? அஸ்வினிடம் கேட்கும் நெட்டிசன்கள்

எல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனா ரம்பா எங்க சார்? அஸ்வினிடம் கேட்கும் நெட்டிசன்கள்

அழகிய லைலா பாடல் நடனம்

அழகிய லைலா பாடல் நடனம்

அழகிய லைலா பாடலுக்கு ஐபில் வீரர்கள் ஆடுவது போல் எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    அழகிய லைலா.. அவள் இவளது ஸ்டைலா.. சந்தன வெயிலா... இவள் மன்மத புயலா.. அடடா பூவின் மாநாடா ஓஹோ ... என ஐபில் வீரர்கள் ஆடுவது போல் எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கார்த்தி, ரம்பா நடிப்பில் 1996ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. இதில் வெளியான அழகிய லைலா பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து அசத்தியது. தற்போது பார்த்தாலும் 90s கிட்ஸ்களின் பிளே லிஸ்டில் இந்த பாடலுக்கு தனி இடமுண்டு.

    இந்த பாடலுக்கு ஐபில் வீரர்கள் ஆடுவது போல் அஸ்வின் வெளியிட்டுள்ள எடிட் செய்யப்பட்ட வீடியோவை கண்ட நெட்டிசன்கள் எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனா ரம்பா எங்க சார்? என அஸ்வினுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

     

     



     

     



     

     



     

     



     

     



     

     



    பார்ப்பதற்கு குபீர் சிரிப்பை வரவழைப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.













    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: IPL 2020, Trending

    அடுத்த செய்தி