Home /News /trend /

சோறு தான் முக்கியம்.. கல்யாண மண்டபம் எரிந்துக் கொண்டிருக்க, பந்தியில் ஒரு கட்டு கட்டும் நபர்... வைரல் வீடியோ

சோறு தான் முக்கியம்.. கல்யாண மண்டபம் எரிந்துக் கொண்டிருக்க, பந்தியில் ஒரு கட்டு கட்டும் நபர்... வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video : திருமண மண்டபத்தில் தீ கொழுந்துவிட்டு எரியும் போது விருந்தினர்கள் உணவை உண்டு மகிழ்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மஹாராஷ்டிராவின் தானேவில் உள்ள பிவாண்டியில் திருமண மண்டபம் தீப்பிடித்து எரிந்த போதும் விருந்தினர்கள் திருமணத்தின் போது பரிமாறப்பட்ட சுவையான உணவுகளை ருசித்துக்கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    அந்த வீடியோவில் , திருமண மண்டபம் தீ பிடித்து எரிந்த போதும் விருந்தினர்கள் எதையும் கண்டுகொள்ளாது,
    அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்தாலும், சத்தத்தை பொருட்படுத்தாமல் சாப்பிட்டு வருகின்றனர். அவர்கள் நாற்காலிகளில் அமர்ந்து நெருப்பைப் பார்க்கிறார்கள், தொடர்ந்து சாப்பிட முயற்சிக்கிறார்கள்.



    உணவு தயாரித்து வைத்திருந்த மேஜைக்கு பின்புறம் உள்ள ஹாலில் தீ விபத்து ஏற்பட்டது. அன்சாரி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பட்டாசு வெடித்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. தானே முனிசிபல் கார்ப்பரேஷன் தகவலின்படி, இந்த தீ விபத்தில் ஆறு இரு சக்கர வாகனங்கள், சில நாற்காலிகள் மற்றும் அலங்காரங்கள் எரிந்து நாசமானது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி