நீங்களா இது.. ? ஹல்க் மாதிரி இருக்கீங்க.. ட்ரெண்டாகும் ஆர்யாவின் நியூ லுக்..!

நீங்களா இது.. ? ஹல்க் மாதிரி இருக்கீங்க.. ட்ரெண்டாகும் ஆர்யாவின் நியூ லுக்..!
பா ரஞ்சித் திரைப்படத்துக்காகத் தனது உடலைக் கடுமையாக வருத்தி உழைத்து வருகிறார்.
  • Share this:
ஆர்யா நடிக்கும் 30-வது திரைப்படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில், இது குறித்து ஆர்யா ட்விட்டரில் தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு சல்பேட்டா என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாராவும், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்காக ஆர்யா தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றியுள்ளார்.


அதற்கான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆர்யா, இந்த திரைப்படம் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். எனினும் ஆர்யாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹல்க் போல் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading