ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் யாமேங் நீர்வீழ்ச்சி.. எங்கு இருக்கிறது தெரியுமா.? - அதன் அழகியல் சிறப்புகளை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.!

சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் யாமேங் நீர்வீழ்ச்சி.. எங்கு இருக்கிறது தெரியுமா.? - அதன் அழகியல் சிறப்புகளை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.!

யாமேங் நீர்வீழ்ச்சி

யாமேங் நீர்வீழ்ச்சி

வெகுஜன மக்களுக்கு தெரியாமல் எண்ணற்ற மலை ஸ்தலங்கள் நமது நாட்டில் உள்ளன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை ஸ்தலங்கள், குற்றாலம், ஒகேனக்கல் போன்ற அருவிகள் என தமிழகத்தில் உள்ள மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை பேரழகு காட்சிகள் இந்தியா முழுவதிலும் இருக்கின்றன. ஆனால், தமிழகத்தை தாண்டிய இயற்கை அழகை சொல்ல வேண்டும் என்றால் காஷ்மீர், சிம்லா, குடகு, மூனாறு போன்ற ஒருசில இடங்கள் தான் நம் மனதிற்கு சட்டென்று நினைவுக்கு வரும்.

ஏனென்றால் இவை எல்லாம் ஏற்கனவே கவனம் பெற்ற, மக்களால் அதிகம் விரும்பத்தக்க சுற்றுலா இடங்களாகத் தான் இருக்கின்றன. ஆனால் நாட்டின் பேரழகு இத்தோடு நின்று விடுவதில்லை. வெகுஜன மக்களுக்கு தெரியாமல் எண்ணற்ற மலை ஸ்தலங்கள் உள்ளன.

அந்த சுற்றுலாப் பகுதி அமைந்துள்ள மாநிலங்களின் அரசுகள், அவற்றை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அருணாசலப் பிரதேச மாநில முதல்வர் பெமா காண்டுவும் அதுபோன்றதொரு பதிவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், யாமேங் அருவி மிக அற்புதமானது. தவாங் பகுதியில் இருந்து மாகோ செல்லும் வழியில் இந்த அருவியை காணலாம். பசுமை போர்த்திய மலை, அப்பகுதியின் வசீகரத்தன்மை ஆகியவை உங்கள் கற்பனைக்கு மேலானதாக இருக்கும். இந்த இடத்தை பார்வையிட்டு, இயற்கையின் பேரழகை நீங்கள் ரசிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வீடியோவிலேயே கண்ணை கவரும் காட்சிகள் நிறைந்துள்ளன. வெள்ளிக் கோடுகள் போல மலையருவிகள் வழிந்தோடி வருகின்றன. இந்த வீடியோவை பார்த்து விட்டு, கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள் பலர், நிச்சயம் இங்கு நேரில் செல்ல வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

Also Read : யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னம் அந்தஸ்தை பெற்ற இந்தியாவின் முக்கிய மலை ரயில் பாதைகள்!

சுற்றுலா துறையை மேம்படுத்துவதன் மூலமாக மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று அருணாசலப் பிரதேச அரசு கருதுகிறது. கடந்த ஆண்டு சுற்றுலா குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை அருணாசலப் பிரதேச அரசு முன்னெடுத்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்று கால ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்துறை பெரும் இழப்புகளை சந்தித்தது. இந்நிலையில், மீண்டும் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

சொர்க்கம் போல காட்சியளிக்கு தவாங்

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியின் நிலப்பரப்பு நமக்கு பிரமிப்பூட்டும் வகையில் இருக்கும். அங்கு 400 ஆண்டுகள் பழமையான மடாலயங்கள் உள்ளன. டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையில் இங்கு பனிப்பொழிவு அதிகமிருப்பதால் வெள்ளை நிற சொர்க்க பூமியாக காட்சியளிக்கிறது.

இந்தப் பகுதி சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை முதல்வர் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார். நாடெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் மாநிலத்திற்கு வருகை தந்து, இங்குள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Published by:Selvi M
First published:

Tags: Arunachal Pradesh, Tourist spots, Trending, Viral Video