Home /News /trend /

எலும்பை உறையச் செய்யும் பால்டிக் கடல் பனிக்கட்டியின் மீது ஓவியம்.. வியக்க வைக்கும் அமெரிக்க ஓவியர்!

எலும்பை உறையச் செய்யும் பால்டிக் கடல் பனிக்கட்டியின் மீது ஓவியம்.. வியக்க வைக்கும் அமெரிக்க ஓவியர்!

பனி ஓவியம்

பனி ஓவியம்

எலும்பை உறையச் செய்யும் காலநிலையில் ஓவியங்களை தீட்டும் போபா

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
ஒரு கலைஞரின் படைப்பாற்றலுக்கு எல்லையே இல்லை. அவரது கற்பனை திறன் எவ்வளவு செல்கிறதோ அந்த அளவு அவரது கலையின் புகழும் பரவும். பால்டிக் கடலில் மிதக்கும் பனிக்கட்டிகளில் உருவப்படங்களை வரைந்து கொண்டிருக்கும் ஒரு அமெரிக்க கலைஞருக்கு இது பொருந்தும்.

சாதாரணமாக பேப்பர், கேன்வாஸ், கண்ணாடி என்று வெவ்வேறு பொருள்களின் மீது ஓவியம் வரைந்து பார்த்திருப்போம். ஆனால் டேவிட் போபா எனும் ஓவியர் பின்லாந்து பகுதியில் உள்ள பனியின் மீது தனது ஓவியங்களை வரைந்து வருகிறார்.

இந்த சிறப்பு ஒளிவங்களுக்கு சாதாரண வண்ணப்பூச்சுகளுக்குப் பதிலாக, ஓவியர் டேவிட் போபா, கரி மற்றும் மண்ணைப் பயன்படுத்தி வரைந்துள்ளார். இதனால் பனி, கடல்நீர் என்று இயற்கைக்கு எந்த தீங்கும் வராமல் பார்த்துக்கொள்கிறார்.

யூடியூப்பில் வைரலாக பரவிவரும் ஒரு வீடியோவில் , 29 வயதான ஓவியர் டேவிட் போபாவின் அசாத்திய திறமையால் உருவான படம் ஒன்றின் வான்வழிக் காட்சி காட்டப்படுகிறது. ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் அங்கு அவர் பெரிய பனிக்கட்டிகளின் மீது மனிதர்களின் முகத்தை வரைகிறார்.அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த போபா, பின்லாந்தின் எஸ்பூவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் குடிபெயர்ந்தார். அங்கு பனிக்கட்டியின் மீது மண்ணை கொண்டு ஓவியங்கள் வரையத் தொடங்கியுள்ளார்."ஆரம்பத்தில் இது சாத்தியம் மற்றும் இயற்கைக்கு பாதுகாப்பானது என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்” என்கிறார்.

2 ஆண்டுகளுக்கு முன் இருந்த பனிக்காலத்தில் தனது முதல் பனிக்கட்டியின் மீதான உருவப்பட ஓவியத்தை வரையத் தொடங்கினார். தற்போது ‘ பிராக்ச்சர்ட் சீரிஸ்’ எனும் பெயரில் பணியில் ஓவியங்களை வரைந்து அதை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

போபாவின் கூற்றுப்படி, ஓவியம் கிட்டத்தட்ட பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலையில் மட்டுமே ஓவியங்கள் நன்றாக வெளிபடுகிறது. கடந்த குளிர்காலத்தின் நிலைமைகள் அவருக்கு சாதகமான பலனளித்தன என்கிறார்.

வினோத உணவுகளின் ரசிகரா நீங்கள்.. உங்களுக்காகவே ஜப்பானில் பச்சை தவளை கறி காத்துகொண்டு இருக்கிறது,,!

எலும்பை உறையச் செய்யும் காலநிலையில் ஓவியங்களை தீட்டும் போபா, முழு உலர் உடையை அணிந்துகொண்டு, ட்ரோன் உட்பட அனைத்து உபகரணங்களையும் தண்ணீர் புகாத பைகளில் எடுத்துக்கொண்டு தண்ணீரில் நீந்தி அந்த இடங்களுக்கு செல்கிறார். காலநிலை மாற்றத்தால் சூடான மற்றும் குளிர்ந்த காலநிலையானது மேலும் மேலும் பனிக்கட்டிகளை உருவாக்கி, பின்னர் விரிசல் ஏற்படுத்துவதால் அவருக்கு ஏற்ற பனிக்கட்டிகள் கேன்வாஸ் போல் கிடைப்பதாக கூறுகிறார்.

இந்த முறையில் உருவாக்கப்படும் உருவப்படங்கள் எபிமரல் ஆர்ட் (ephemeral art) என்று அழைக்கப்படுகின்றன. மேலும் அவை உருகி, விரிசல் விட்டு மறைந்து போகும் முன் சில கணம் மட்டுமே நிலைத்திருக்கும். ஆனால் இந்த பனிக்கட்டி ஓவியங்கள் உருவாக்க சுமார் நான்கு மணி நேரம் ஆகும் என்று போப்பா தெரிவிக்கிறார்.

ஆனால், முடிக்கப்பட்ட உருவப்படம் சிறிது நேரம் கழித்து மறைந்தாலும், போபாவின் முயற்சிகள் வீண் போகவில்லை. அவரது தனித்துவமான திறன்களால் உருவாக்கபட்ட, போபாவின் சுமார் 100 அச்சிடப்பட்ட படங்கள் விற்பனை ஆகியுள்ளன. அவரது புகழும் உலகெங்கும் பரவியுள்ளது. கூடுதலாக, அவர் கலையை வீடியோக்களில் படம்பிடித்து, அவற்றை வீடியோ NFTகளாக விற்கிறார். NFT ஒன்று $15,000 (தோராயமாக ரூ. 11.97 லட்சம்) என்று விற்பனை ஆகிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Ice land, Viral Video

அடுத்த செய்தி