Home /News /trend /

இந்த படத்தில் மரம் மறைந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? வைரலாகும் 3டி இல்யூசன்

இந்த படத்தில் மரம் மறைந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? வைரலாகும் 3டி இல்யூசன்

3D graffiti painting

3D graffiti painting

3D Illusion Painting | மரத்திற்கு நடுவில் பெண் நிற்பது போன்று ஓவியர் ஒருவர் வரைந்த 3டி ஆப்டிகல் இல்யூசன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
நமது அறிவுத்திறனை சோதிக்கும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்கள் தான் இணையத்தை சமீப காலங்களாக ஆக்கிரமித்து வருகிறது. நம்முடைய அறிவுத் திறனையும், ஆளுமையையும் சோதிக்கும் ஒளியியல் மாயைப் புகைப்படத்தைப் பார்க்கும் நபர்கள் எவ்வளவு விரைவாக அதில் மறைந்திருக்கும் விஷயங்களை எத்தனை நிமிடத்தில் கண்டுபிடிக்கிறார்கள்.? ஒளியியல் மாயையில் கொடுக்கப்பட்டிருக்கும் வினாடிகளுக்குள் கண்டுபிடிக்கிறார்களா.? என்பது தான் கேள்வியாக அமைந்திருக்கும். மேலும் ஆப்டிகல் இல்யூசன்களைக் கொண்டு ஒருவரின் கேரக்டர், ஐகியூ திறன் ஆகியவற்றையும் அறிந்துக் கொள்ள முடிகிறது.

இப்படி ஒளியியல் மாயை புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, நெட்டிசன்களின் அறிவுத்திறனை சோதிக்கும் பரிசோதனையாக வலம் வருகிறது. நாம் மட்டும் மாட்டிக்கொண்டால் போதுமா.? என்று தங்களுக்குக் கிடைத்த இல்யூசன் புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பியும் அவர்களையும் போட்டிக்கு அழைக்கிறார்கள் இணையவாசிகள். இப்படி இணையத்தை ஆக்கிரமிக்கும் இதுப்போன்ற ஒரு 3டி வடிவிலான ஆப்டிகல் இல்யூசன் ஓவியம் ஒன்று இணையத்தில் வைரலாகிறது. வீடியோவைப் பார்த்தவுடனே செம சூப்பராக இருக்கு என்று நெட்டிசன்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது 3டி ஆப்டிகல் இல்யூசன் ஓவியம்..

வைரலாகும் 3 D ஆப்டிகல் இல்யூசன் ஓவியத்திலுள்ள சுவாரஸ்சியம்: 

தற்போது டிவிட்டரில் வெளியான வீடியோவில், ஒரு காட்டிற்குள் சுற்றிலும் செடி, கொடிகளுக்கு நடுவில் நீண்டதாக மரம் இருப்பதைக்காணலாம். ஓவியர் ஒருவர் அந்த மரத்தின் தண்டுப் பகுதியில் ஒரு வெள்ளை பேப்பரை ஓட்டுகிறார். பின்னர் அதில் அசால்டாக ஒரு பெண்ணின் உருவம் போன்ற ஓவியத்தை வரைய ஆரம்பிக்கும் சில நிமிடத்திலேயே நம் கண்களை நம்மால் நம்ப முடியாத அளவிற்கு தத்ரூபமான 3 டி புகைப்படம் ஒன்றைக் காண முடிகிறது.

Also Read : 99 சதவீதம் பேர் தோல்வி... ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்தி இந்த கணக்கை சமன் செய்ய முடியுமா.?

அப்படி என்ன இருந்தது தெரியுமா? மரத்தில் நடுவே ஒரு பந்தில் அழகான ஒரு பெண் நின்று இயற்கையை ரசிப்பது போன்றும், அவரது தலைக்கு மரம் வட்டமிடுவது போலவும் அழகாக வரைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படியெல்லாம் ஓவியங்கள் வரையலாமா? என்ற கேள்விகளோடு பார்க்கும் அனைவரையும் செம சூப்பர் என சொல்லும் அளவிற்கு வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இப்புகைப்படத்தைப் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தெரிகிறது.? என்ற கேள்வியோடு வைரலாகும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல கருத்துக்களை டிவிட் செய்து வருகின்றனர்.குறிப்பாக “ஓவியர் உண்மையில் புத்திசாலி தான், இப்படி வரைய எவ்வளவு நேரம் எடுத்திருப்பார்? இது உண்மையில் புகைப்படமா? அல்லது ஓவியமா?“ என்பது போன்ற பல கேள்விகளை முன்வைத்தனர். மேலும் நிச்சயம் இது நம்முடைய அறிவுத் திறனை மேம்படுத்த உதவும் ஆப்டிகல் இல்யூசன் அதாவது ஒளியியல் மாயை 3 டி புகைப்படம் தான் என சிலர் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். இதுவரை இணையத்தில் வெளியான இந்த வீடியோ 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து டிரெண்டாகி வருவதோடு லட்சக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி