• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஜெருசலேமில் 2,700 ஆண்டுகள் பழமையான கழிப்பறை - ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!

ஜெருசலேமில் 2,700 ஆண்டுகள் பழமையான கழிப்பறை - ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!

 2,700 ஆண்டுகள் பழமையான கழிப்பறை

2,700 ஆண்டுகள் பழமையான கழிப்பறை

அகழாய்வு நடத்தப்பட்ட பகுதியானது, மிகப்பெரிய மாளிகை இருந்ததற்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன. அவற்றின் ஒரு பகுதியில் கழிப்பறை, பழத்தோட்டங்கள், நீர் பூங்காக்கள் இருத்தற்கான தடயங்கள், பொருட்கள் கிடைத்துள்ளன.

  • Share this:
புனித நகரமான ஜெருசலேமில் 2,700 ஆண்டுகள் பழமையான கழிப்பறையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கிறிஸ்துவர்களின் புனித நகரமாக போற்றப்படும் ஜெருசலேமில் 2,700 ஆண்டுகள் முந்தைய, அரிய பழங்கால தனிநபர் கழிப்பறையை இஸ்ரேலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தனிநபர் கழிவறைகள் மிகவும் ஆடம்பரமாக, செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பிரம்மாண்ட மாளிகையின் ஒரு பகுதியாக இருந்துள்ள அந்த டாய்லெட்டுக் கீழே செப்டிக் டேங்கும் அமைக்கப்பட்டிருப்பது ஆய்வாளர்களின் தொல்பொருள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் இயக்குநர் யகோவ் பில்லிக் பேசும்போது, தனிநபர் கழிவறை என்பது பழங்காலங்களில் மிகவும் அரிதினும் அரிதான ஒன்று எனத் தெரிவித்துள்ளார். பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சில தனிநபர் கழிப்பறைகளில் ஒன்றாக இது இருப்பதாக தெரவித்துள்ள அவர், அரசர்கள் மற்றும் மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே இதுபோன்ற தனிநபர் கழிவறைகளை வைத்திருந்திருக்க முடியும் எனத் தெரிவித்தார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கும்போது, "இஸ்ரேல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏற்கனவே பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும். அக்கால செல்வந்தர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதற்கான முக்கிய சான்றாக இந்த தனிநபர் கழிப்பறை இருந்துள்ளது. செல்வந்தர்கள், அரச பரம்பரையினர் மட்டுமே தனிநபர் கழிப்பறை பயன்படுத்தியிருந்தாலும், அரிதினும், அரிதாக மட்டுமே இதுபோன்ற கண்டுபிடிப்புகள் இதுவரை இருந்திருக்கிறது.

இது முதல் கண்டுபிடிப்பு அல்ல, ஏற்கனவே சில தனிநபர் கழிப்பறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல், இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்ட இடத்திற்கு அருகாமையில் பழத்தோட்டங்கள், கல் வரிசைகள் உள்ளிட்டவைகளையும் அகழ்வராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தோட்டங்கள், நீர்வாழ் தாவரங்கள் அப்பகுதியில் இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாக தெரிவித்த ஆய்வாளர்கள், அப்பகுதியில் வசித்தவர்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Also read... உடல் உறுப்பு தானம் செய்ததன் மூலம் மூன்று பேரின் உயிரை காப்பாற்றிய முதியவர்!

அகழாய்வு நடத்தப்பட்ட பகுதியானது, மிகப்பெரிய மாளிகை இருந்ததற்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன. அவற்றின் ஒரு பகுதியில் கழிப்பறை, பழத்தோட்டங்கள், நீர் பூங்காக்கள் இருத்தற்கான தடயங்கள், பொருட்கள் கிடைத்துள்ளன. அந்தப் பொருட்கள் தற்போது இஸ்ரேலின் கலைக்களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு, அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் அடையாளங்களும், வணிகம் சார்ந்த தகவல்களை திரட்டுவதற்கான முயற்சியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று பல்வேறு அடையாளங்கள் அப்பகுதியில் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள அகழ்வாய்வாளர்கள், விரைவில் அடுத்தக்கட்ட ஆராய்ச்சியை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலைப் பொறுத்தவரை மானுட சமூகம் பிறந்து வாழ்ந்த பல அரிய வரலாற்று தகவல்களை கொண்ட இடமாக இருந்து வருகிறது. அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, பண்பாட்டு முறை, உலகின் மற்றப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் குழுக்களுடன் ஒத்துப்போகிறது. இது குறித்தும் ஆய்வாளர்கள் ஆய்வை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: