தொழில்நுட்ப ரீதியாக நம் உலகம் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வரும் நிலையில், பல 100 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இன்று நாம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மேம்பட்ட தொழில்நுட்பம், கட்டமைப்பு என்று பல விதங்களில் நம்மை விட அதிக அட்வான்ஸ்டாக வாழ்ந்துள்ளனர்.
இதற்கு சான்றாக தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் அதிசயத்தக்க வகையில் இருக்கின்றன. அதில் ஒன்று தான் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த பாதைகள்! பெருவியா நாட்டில் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான ஒரு கோவிலின் அடிவாரத்தில் பல பாதைகள் கண்டறியப்பட்டுள்ளன.
பெருவியனில் உள்ள ஆண்டிஸில் 3,000 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பழமையான கோவிலின் கீழ்ப்பகுதியில் network of paths என்று கூறப்படும் அளவுக்கு பாதைகளின் அமைப்பை தொல்பொருள் ஆய்வாளர்களின் குழு கண்டுபிடித்துள்ளது.
ஆயிரங்கள் ஆண்டு பழமையானது Chavin de Huantar என்ற இந்த கோவில். இது ஆண்டிஸ்ஸின் வட-மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில், இந்த கோவில் மக்களின் வழிபாட்டு தளமாகவும், நிர்வாக மையமாகவும் இருந்தது. கடல் மட்டத்தில் இருந்து 3200 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த கோவில், பல ஆண்டுகளாக ஆய்வுக்குட்பட்டு வந்துள்ளது.
4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகம் இப்படி இருக்குமாம் - விஞ்ஞானிகளின் அசத்தல் முயற்சி!
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜான் ரிக் இந்த கோவிலின் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரின் ஆய்வின் படி, இதில் இருந்த பாதைகள் கடந்த மே மாதம் கண்டறியப்பட்டன. குறைந்தப்பட்சமாக, 35 நிலத்தடி பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இதற்கு மேலும் கூடுதலாக பல பாதைகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலான பழமையான ஆலயங்களில் நிலத்தடி பாதைகள் இருக்குமே, இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று யோசிக்கலாம். இந்தக் கோவிலில் உள்ள நிலத்தடி பாதைகள் அனைத்துமே ஒன்றோடொன்று இணைந்துள்ளன. இந்த நிலத்தடி பாதைகளின் கட்டமைப்பு ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்துள்ளதாகவும், இது மேம்பட்ட கட்டடக்கலை மற்றும் நுட்பமான வேலைத்திறன் ஆகியவற்றுக்கு உதாரணமாக இருக்கிறது.
மேலும், இந்தப் பாதைகள் ஒரு வலையமைப்பைப் போல் கட்டப்பட்டுள்ளன. இவை, கிமு 1200ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை வெவ்வேறு காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கோவில் 1985 ஆம் ஆண்டு உலகின் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பாதைகளை மேலும் ஆய்வு செய்த ரிக், ‘இந்த பாதைகள் வழிப்பாதைகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மற்ற பாதைகளைப் போல அல்லாமல் மிகவும் வித்தியாசமானவை. நாம் இதுவரை பெரிதும் பார்த்திராத அல்லது அறிந்திராத பல கட்டமைப்பின் பல காலகட்டங்களின் அம்சங்களை இந்த பாதைகளில் காணலாம்” என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.