ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சிறுமியின் புற்றுநோயை கண்டுபிடித்த ஸ்மார்ட் வாட்ச்.. அடடே போடவைத்த டெக்னாலஜி!

சிறுமியின் புற்றுநோயை கண்டுபிடித்த ஸ்மார்ட் வாட்ச்.. அடடே போடவைத்த டெக்னாலஜி!

வைரல் பதிவு

வைரல் பதிவு

ஸ்மார்ட்வாட்ச் எச்சரிக்கை விடுக்காவிட்டால், தன் மகளை காப்பாற்றியிருக்க முடியாது என்று ஜெசிகா தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விலை உயர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கும்போது, அவை ஆடம்பரமானவை என்ற விமர்சனத்தை நீங்கள் எதிர்கொண்டது உண்டா? குறிப்பாக, நீங்கள் ஸ்மார்ட் வாட்ச் அணியும் பழக்கம் கொண்டவர் என்றால் இந்த விமர்சனத்தை நீங்கள் எதிர்கொண்டிருப்பீர்கள்.

சாதாரணமாக ஆயிரம், ரெண்டாயிரம் ரூபாய்க்கு பிராண்டட் வாட்சு-கள் கிடைக்கும் நிலையில், பல்லாயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட ஸ்மார்ட் வாட்ச் அவசியம் தானா என்ற கேள்வி உங்களுக்கும் இருக்கலாம். ஆனால், ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துவோரை கேளுங்கள். நாம் ஃபோன் கால் பேசலாம், மியூஸிக் பிளே செய்யலாம் என்ற சொகுசு வசதிகளை குறித்து தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், இதையெல்லாம் தாண்டி ஒரு உயிரை காக்கும் அளவுக்கு சிறப்பசங்கள் சில ஸ்மார்ட்வாட்ச்களில் இருக்கின்றன. குறிப்பாக ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு இந்தத் திறன் உண்டு. பொதுவாக நமது இதய துடிப்பின் அளவை ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சு தொடர்ந்து கணித்துக் கொண்டே இருக்கும்.

Read More | ஸ்மார்ட்போன் வாங்க ரத்தத்தை விற்க முயன்ற சிறுமி.. ஷாக்கான மருத்துவ அதிகாரிகள்!

இதயத்துடிப்பு சீராக இல்லாமல் அதிவேகமாக அல்லது மெதுவாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நீங்கள் சுயநினைவோடு இருக்க வாய்ப்பில்லை. ஆனால்,222 அத்தகைய தருணங்களில் நீங்கள் இருக்கும் லொகேஷனுடன், அவசர உதவி மையத்திற்கு ஆப்பிள் வாட்ச் தகவல் தெரிவித்து விடும்.

உதாரணத்திற்கு சாலை விபத்துகளில் சிக்கி மயக்கமடைந்த நபர்கள் குறித்து, ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் மூலமாக தகவல் கிடைத்து காப்பாற்றப்பட்டவர்கள் இருக்கின்றனர். அதேபோல, சாதாரண நிலையிலும், இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பது நமக்கு தெரிய வரும்போது, நம் உடலில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

அந்த வகையில் தற்போது சிறுமி ஒருவரின் உடல்நல பாதிப்பு குறித்து ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் மூலமாக தெரிய வந்துள்ளது. இமானி மைல்ஸ் என்ற 12 வயது சிறுமியின் இதய துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பது குறித்து ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் அவ்வபோது அலர்ட் செய்து கொண்டே இருந்தது.

இதுகுறித்து தனது தாயார் ஜெசிகா கிச்சனிடம் அந்த சிறுமி தகவல் கூறினார். இதற்கு முன்பு எப்போதும் இப்படி நிகழ்ந்தது இல்லை என்ற நிலையில், பதறிப்போன அந்த தாய், தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தார். சிறுமிக்கு ஏற்கனவே அப்பெண்டிக்ஸ் பிரச்னை இருந்து வந்த நிலையில், அது புற்றுநோயாக மாறியிருப்பது இந்தப் பரிசோதனை மூலமாக தெரிய வந்தது. இதைதொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலமாக புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

ஸ்மார்ட்வாட்ச் எச்சரிக்கை விடுக்காவிட்டால், தன் மகளை காப்பாற்றியிருக்க முடியாது என்று ஜெசிகா தெரிவித்தார். ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் மூலம் எச்சரிக்கப்பட்ட ஒருவருக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral