மனைவியை குஷிப்படுத்த கோலி செய்த சேட்டை...! அனுஷ்கா பகிர்ந்த வேடிக்கை வீடியோ

Virat Kohli | Anushka Sharma | விராட் கோலி டைனோசர் போன்று நடந்து வரும் வீடியோவை அனுஷ்கா பதிவிட்டுள்ளார்.

மனைவியை குஷிப்படுத்த கோலி செய்த சேட்டை...! அனுஷ்கா பகிர்ந்த வேடிக்கை வீடியோ
விராட் கோலி
  • Share this:
லாக்டவுனில் வீட்டில் இருக்கும் தனது காதல் மனைவி அனுஷ்காவிற்கு, விராட் கோலி சிறந்த பொழுதுபோக்காக உள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. லாக்டவுனை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இணைந்து சந்தேஷமாக கழித்து வருகின்றனர்.

அனுஷ்கா சர்மாவுடன் வீட்டில் இவ்வளவு நாட்கள் ஒன்றாக இருந்ததே இல்லை என்று விராட் கோலி தெரிவித்திருந்தார். வீட்டில் தனிமையில் இருக்கும் இவர்கள் பொழுது போக்க கிரிக்கெட் விளையாடுவது, முடி வெட்டிவிடுவது போன்ற செயலில் ஈடுபட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.


தற்போது விராட் கோலி டைனோசர் போன்று நடந்து வந்து அதுபோன்று சத்தம் எழுப்பும் வீடியோவை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விராட் கோலி டைனோசர் போன்றே பாவனைகள் செய்வது அனைவரையும் சிரிக்க வைத்துவிடும்.

 
View this post on Instagram
 

I spotted .... A Dinosaur on the loose 🦖🦖🦖🤪🤪🤪


A post shared by ɐɯɹɐɥS ɐʞɥsnu∀ (@anushkasharma) on


அனுஷ்கா சர்மா பகிர்ந்துள்ள இந்த கலகலப்பான வீடியோவை பலர் லைக் செய்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க இருவரும் சமூக இடைவெளி குறித்த பல விழிப்புண்ர்வு வீடியோக்களை இவர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading