நிறைமாத கர்ப்பத்திலும் விளம்பரத்தில் நடித்த அனுஷ்கா சர்மா - வீடியோ

நிறைமாத கர்ப்பத்திலும் விளம்பரத்தில் நடித்த அனுஷ்கா சர்மா - வீடியோ

அனுஷ்கா சர்மா

திருமணத்திற்கு பின் அனுஷ்கா சர்மா உடன் தான் செலவிடும் அன்பான தருணங்களை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களாக பகிர்ந்து வந்தார்.

 • Share this:
  பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா 9 மாத கர்ப்பத்தின் போதும் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

  பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்களின் திருமணம் இத்தாலியில் கோலாகலமாக நடைபெற்றது.

  திருமணத்திற்கு பின் அனுஷ்கா சர்மா உடன் தான் செலவிடும் அன்பான தருணங்களை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களாக பகிர்ந்து வந்தார். இந்தியாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் இவர்கள் லாக்டவுன் நேரத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். அடுத்த வருடம் டிசம்பர் இவர்கள் தனது முதல் குழந்தையை பெற்றெடுக்க உள்ளனர்.

  அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனைபடி யோகா, உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது 9 மாத கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா தற்போது விளம்பர படத்தில் ஒன்றும் நடித்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)


  பெண்கள் கர்ப்பமாக இருக்கிறோமோ இல்லையா என்பதை கண்டறியும் கிட் குறித்த விளம்பரம் ஒன்றில் தான் அனுஷ்கா சர்மா நடித்துள்ளார். தனது முதல் குழந்தையின் ஆரோக்கயத்தில் பெண்கள் மிகவும் அக்கறை எடுத்து கொள்வார்கள். அதுப்போன்று மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்றே அனுஷ்கா சர்மா இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விளம்பரத்தில் தனது தாய்மை குறித்த அனுபவங்களை அனுஷ்கா சர்மா பகிரிந்துள்ளார்.கர்ப்பமாக இருந்ததிலிருந்து தனது வாழ்க்கை எவ்வாறு மாறிவிட்டது என்பதைப் பற்றி பேசும்போது அழகாகவும் பிரகாசமாகவும் அவர் காணப்பட்டார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: