பும்ராவின் விடுப்பால் கவனம் ஈர்க்கும் நடிகை அனுபமாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

அனுபாமா - பும்ரா

ஐ.பி.எல் 2021 தொடருக்கு முன் பும்ராவிற்கு திருமண முடிக்க அவரது வீட்டில் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றனர்.

  • Share this:
    தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியில் இருந்து பும்ரா விடுப்பு எடுத்துள்ள நிலையில் நடிகை அனுபமாவின் இன்ஸ்டாகிராம் பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அகமாதபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக 4-வது டெஸட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பிசிசிஐ-யிடம் விடுப்பு கேட்டிருந்தார். பும்ராவிற்கு பிசிசிஐ விடுப்பு கொடுத்த நிலையில் வேறு எந்த வீரரையும் அவருக்கு மாற்றாக அறிவிக்கவில்லை. முகமது சிராஜ் 4-வது டெஸ்டில் பும்ராவிற்கு பதிலாக இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே பும்ராவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஐ.பி.எல் 2021 தொடருக்கு முன் பும்ராவிற்கு திருமண முடிக்க அவரது வீட்டில் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றனர். இதனிடையே நடிகை அனுபமாவும் பும்ராவும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் ஃபாலோ செய்து வருகின்றனர். தற்போது அனுபமாவின் இன்ஸ்டா பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.




    நடிகை அனுபமா தனது இன்ஸ்டாகிராமில் எனக்கு இனிய விடுமுறை என்று பதிவிட்டுள்ளார். பும்ரா இந்திய அணியிலிருந்து விடுப்பு எடுத்துள்ள நிலையில் அனுபாமாவின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரசிகர்கள் பலர் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published: