பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, கையில் இருந்த ரஃபேல் கைக்கடிகாரத்தின் விலை தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு எழுந்திருக்கும் நிலையில், அந்த கைக்கடிகாரத்தின் சிறப்புகள் என்ன, எதற்காக இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறார்கள் தெரியுமா?
ஸ்பெஷல் எடிஷன் மோகம்
புத்தகங்கள் தொடங்கி கார், பைக், செல்போன், கைக்கடிகாரம், பேனா, பெர்ப்யூம் வரை கூடுதல் சிறப்பம்சங்களுடன் குறைந்த எண்ணிக்கையில் தயாராகும் ஐகானிக் பொருட்களை ‘ஸ்பெஷல் எடிஷன்’ என்கின்றன சர்வதேச நிறுவனங்கள். அந்தப் பொருட்கள் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கான signature product ஆக உலகளாவிய சந்தையில் முக்கிய நபர்கள் பயன்படுத்தும் பொருட்களாக மாறி விடுகின்றன. சேகரித்து வைக்கப்படும், விருப்பத்துக்கு உரிய கிளாசிக் கலெக்ஷன்ஸ் ஆகவும் எதிர்கால வரலாற்றில் அந்தப் பொருட்கள் இடம் பிடிக்கும்.
பி.எம்டபிள்யூ, டெயொட்டா, கியா, ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ‘ஸ்பெஷல் எடிஷன்’ கார்கள் சந்தையில் ஏக போக வரவேற்பை பெற்றன. பொதுவாக இது போன்ற பொருட்களின் மீது தீராக் காதல் கொண்டவர்கள் ‘ஸ்பெஷல் எடிஷன்’ வெளியீட்டுக்காக தவமாய் தவமிருப்பார்கள். அவர்களின் கலெக்-ஷனில் அது இடம்பிடிக்கும் வரை தூங்கமாட்டார்கள்.
ரபேல் விமானத்தின் டிஎன்ஏ உங்கள் கைகளில்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் இந்திய ராணுவத்துக்கு 36 ரபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்கியது. டசால்ட் நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல வாட்ச் தயாரிப்பு நிறுவனமான Bell & Ross கடந்த 2013ம் ஆண்டு பல்கான் போர் விமானத்தின் நினைவாக Vintage Sports Heritage என்ற மாடல் கைக்கடிகாரத்தை வெளியிட்டது.
பின்னர் 2015ம் ஆண்டு BR – 03-94 என்ற மாடல் வாட்ச் ஒன்றை Bell & Ross தயாரித்து வெளியிட்டது. ரபேல் விமானத்தை போல அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ளக் கூடியது என்றும், வெறும் 500 கைக்கடிகாரங்கள் மட்டுமே ‘ஸ்பெஷல் எடிஷன்’ ஆக தயாரிக்கப்படும் என்றும் அறிவித்தது.
விலை எவ்வளவு?
‘ரபேல் விமானத்தின் டிஎன்ஏ உங்கள் கைகளில்’ என்பது தான் இந்தக் கடிகாரத்திற்கான சிறப்பு. இப்படி தயாரான 500 கைக்கடிகாரங்களை, உலகளவில் பல முக்கிய நபர்கள் அப்போதே பதிவு செய்து வாங்கி விட்டார்கள். இதன் விலை 3.5 லட்சம் தொடங்கி 5.5 லட்சம் வரை நாடுகளின் வரிகளுக்கு ஏற்ப விற்கப்பட்டது. இந்திய மதிப்பில் ஒரு ரஃபேல் கைக்கடிகாரத்தின் விலை 4.4 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி என்ன தான் சிறப்பு?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, Rafale Flight, Rafale jets