Home /News /trend /

இதில் நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது.? உங்கள் ஆளுமை பண்புகளை தெரிந்து கொள்ளுங்கள்..

இதில் நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது.? உங்கள் ஆளுமை பண்புகளை தெரிந்து கொள்ளுங்கள்..

optical illusion

optical illusion

Optical Illusion | இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை நாம் பார்க்கும் விதத்தில் இருந்து நாம் எப்படிப்பட்டவர், நம் குணம் என்ன என்பதை கூட தெரிந்து கொள்ளலாம்.

    நமது மூளைக்கு இடது மற்றும் வலது என 2 பக்கங்கள் உள்ளன, அவை வித்தியாசமாக செயல்படுகின்றன. நமது மூளையின் எந்தப் பக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை பொறுத்து நாம் சிந்திக்கும் விதம் இருக்கிறது . நம் கண்களை ஏமாற்றும் ஒன்றாக இருக்கிறது ஆப்டிக்கல் இல்யூஷன். நாம் அதை பார்க்கும் முதல் பார்வையில் சட்டென்று ஒரு தோற்றமும், தொடர்ந்து அதையே கூர்ந்து பார்க்கும் போது வேறு தோற்றமும் புலப்படும்.

    இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை நாம் பார்க்கும் விதத்தில் இருந்து நாம் எப்படிப்பட்டவர், நம் குணம் என்ன என்பதை கூட தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் நாம் இங்கே விலங்குகளின் உருவங்கள் அடங்கி இருக்கும் ஒரு ஆப்டிக்கல் இல்யூஷனை பார்க்கலாம். நீங்கள் கீழ்காணும் ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் முதலில் பார்க்கும் விலங்கு உங்கள் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்தும். மேலும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் மூளையின் எந்தப் பக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் நீங்கள் இதில் முதலில் கவனிக்கும் விலங்கு அடிப்படையில் உங்கள் ஆளுமைப் பண்புகளை அறிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்...



    ஒரு புலியின் தலையை முதலில் பார்த்தால்...

    மேற்கண்ட ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜில் நீங்கள் முதலில் ஒரு புலியின் தலையை பார்த்திருந்தால், உங்களில் மூளையின் வலது பக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று அர்த்தம். நீங்கள் எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதற்கு முன் நன்கு ஆராய்ந்து, திட்டமிட்டு பகுப்பாய்வு செய்து எடுக்க விரும்புவீர்கள். எடுக்கும் முடிவுகளை தர்க்கரீதியாக மற்றும் பல கணக்கு போட்டு எடுப்பீர்கள் என்பதால் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் மிகவும் பிடிவாதமாக இருப்பீர்கள் மற்றும் மற்றவர்களின் கருத்துக்களை புறக்கணிப்பீர்கள்.

    ஆளுமை பண்புகள்:

    திட்டமிடுபவர்:

    நீங்கள் ஒரு விஷயத்தை செய்வதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டு திட்டமிட கூடியவர்.

    தர்க்கரீதியானவர்:

    ஏற்கனவே சொன்னபடி நீங்கள் ஒரு முடிவிற்கு வருவதற்கு முன் பல விஷயங்களை தர்கரீதியாக பகுப்பாய்வு செய்வீர்கள்.

    உண்மை தான் எல்லாமே:

    உங்கள் இலக்குகளை அடைய விஷயங்களை பகுத்தறிந்து உண்மைகளின் அடிப்படையில் நீங்கள் முடிவுகளை எடுக்கிறீர்கள்.

    யதார்த்தவாதி:

    நீங்கள் யதார்த்தமானவர் மற்றும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் நீங்கள் எதைச் சாதிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ளும் உணர்வு கொண்டவர்.

    துல்லியமானவர்:

    தெளிவான இலக்குகள் மற்றும் அவற்றை அடைய நீங்கள் செல்ல வேண்டிய பாதைகளை துல்லியமாக வகுக்கும் திறன் கொண்டவர்.

    Read More : ஆஸ்திரேலியாவில் Bar-க்குள் நுழைந்த கங்காரு - பின்னர் நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!


    துரத்தும் குரங்கை முதலில் பார்த்தால்...

    தொங்கும் குரங்கை நீங்கள் முதலில் கண்டால் விமர்சன சிந்தனையை விட உங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் நீங்கள் முடிவுகளை எடுப்பீர்கள்.ஒரு ஆக்கப்பூர்வமான மனம் கொண்டவர் நீங்கள்.

    ஆளுமை பண்புகள்:

    சிந்திக்காமல் செயல்படுபவர்..

    நீங்கள் சில நேரங்களில் பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கத்திற்கு மாறாக சில முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள்.

    உணர்ச்சிபூர்வமாக செயல்படுபவர்..

    நீங்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள் மற்றும் ஒரு முடிவுகளை எடுக்கும் முன் சிந்திப்பதற்கு அதிமாக நேரத்தை செலவிடுவீர்கள்.

    படைப்பாற்றல்..

    நீங்கள் ஆக்கப்பூர்வமான மனதை கொண்டவர். மேலும் நீங்கள் இசை, கலை மற்றும் பிற படைப்புத் துறைகளில் படைப்பாற்றல் மிக்கவர் மற்றும் திறமையானவர்.

    உள்ளுணர்வு:

    விதி செல்லும் வழியில் செல்லாமல் உங்கள் உள்ளுணர்வுகளின் அடிப்படையில் நீங்கள் முடிவுகளை எடுக்கிறீர்கள்.

    கனவு காண்பவர்..

    நீங்கள் பல சமயங்களில் கனவு உலகத்தில் வாழ்வீர்கள் மற்றும் கனவுலகில் நீங்கள் அடிக்கடி தொலைந்து போவீர்கள்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Optical Illusion, Trending, Viral

    அடுத்த செய்தி