முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / லீவ் சம்பளம் தராத கடுப்பில் கிச்சனுக்குள் கரப்பான் பூச்சிகளை விட்ட சமையல்காரர் -17 மாத சிறை தண்டனை!

லீவ் சம்பளம் தராத கடுப்பில் கிச்சனுக்குள் கரப்பான் பூச்சிகளை விட்ட சமையல்காரர் -17 மாத சிறை தண்டனை!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கிட்சனுக்குள் இருந்த கரப்பான் பூச்சியை விரட்டுவதற்கு பப் நிர்வாகம்  இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

ஊதியம் குறைவாக அளித்ததினால் சமையலறைக்குள் 20 கரப்பான் பூச்சிகளை விட்டு சேதம் உண்டாக்கிய சமையல்காரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த டாம் வில்லியம்ஸ் என்பவர் சமையல்கலை நிபுணராக உள்ளார். இவர் லிங்கன்ஷையர் நகரத்தில் உள்ள ப்ரேஃபோர்ட் பூல் என்னும் இடத்தில் இயங்கி வரும் பப் (PUB) ஒன்றில்  செஃப் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் நிர்வாகத்திற்கும் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி மிகக் கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளதாக தெரிகிறது.

அதாவது அவருக்கு அளிக்கப்படும் விடுமுறை ஊதியம் மிகவும் குறைவாக உள்ளதாகவும், இதைப்பற்றி  விடுதி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். . அவரது கோரிக்கைக்கு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை எனத் தெரிகிறது. இதில் கடுப்பானவர் இரண்டு நாட்களுக்கு பின்  பப் கிட்சனுக்குள் சுமார் 20 கரப்பான் பூச்சிகளை விட்டுள்ளார்.

Also Read: சானியா உன்னை நினைத்து பெருமையா இருக்கு..! ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிய ஷோயப் மாலிக்

கிட்சனுக்குள் இருந்த கரப்பான் பூச்சியை விரட்டுவதற்கு பப் நிர்வாகம்  இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது. கரப்பான் பூச்சியினால் ஏற்பட்ட நாசங்களை சுத்தம் செய்து மீண்டும் பழைய நிலைமைக்கு வருவதற்கு இவ்வளவு தொகை செலவாகி உள்ளது. நிர்வாகமானது சமையல்காரருக்கு விடுமுறை ஊதியமாக இந்திய மதிப்பில் 10 ஆயிரம் ரூபாய் அளித்ததாக கூறப்படுகிறது.

கரப்பான் பூச்சிகளை மற்ற விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக  சேகரித்து வைத்திருந்தாராம். மேலும் அங்கிருந்த மற்ற ஊழியர்களையும் கரப்பான் பூச்சிகளை தொடக்கூடாது என்றும், அவை நச்சு தன்மை மிகுந்தவை என்றும்  பயமுறுத்தி உள்ளார். இதன்பிறகு அங்கிருப்பவர்கள்  சுகாதார துறையின் உதவியால் அந்த கிட்சனை சுத்தம் செய்துள்ளனர்.

இதில் கடுப்பான நிர்வாகம் அவர் மீது வழக்கு தொடர்ந்தது.இவர் மீது சுமத்தப்பட்ட வழக்கானது நவம்பர் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது  அவர் ஆஜராகவில்லை. இதன்பின்னர் நவம்பர் 28ஆம் தேதி அவருக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டது. கரப்பான் பூச்சியை சமையலறைக்குள் விட்ட குற்றத்திற்காகவும், விசாரணைக்கு ஆஜராக தவறிய குற்றத்திற்காகவும் நீதிபதி அவரை கடுமையாக சாடினார். பின்னர் கரப்பான் பூச்சியை சமையலறைக்குள் விட்ட சமையல்காரருக்கு 17 மாத சிறை தண்டனையும், அதனுடன் 200 மணி நேர ஊதியமில்லா சமூக சேவையை ஆற்ற வேண்டும் என்ற உத்தரவும நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டது.

First published:

Tags: England, Food, Tamil News, Trending, Trending News, Unhygienic kitchen