• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • யாரு இடத்துல வந்து யார் சீன் போடுறது... செஞ்சுருவோம் - ட்ரோனை கொத்தி கீழே தள்ளிய காக்கை - வைரல் வீடியோ

யாரு இடத்துல வந்து யார் சீன் போடுறது... செஞ்சுருவோம் - ட்ரோனை கொத்தி கீழே தள்ளிய காக்கை - வைரல் வீடியோ

ட்ரோனை கொத்தி கீழே தள்ளிய காக்கை

ட்ரோனை கொத்தி கீழே தள்ளிய காக்கை

ஆஸ்திரேலியாவில் காபியை டெலிவரி செய்யும் ட்ரோனை அண்டங்காக்கை கீழே தள்ளிவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Share this:
    ஆஸ்திரேலியாவில் சில உணவு நிறுவனங்கள் ட்ரோனைப் பயன்படுத்தி உணவுகளை டெலிவரி செய்து வருகின்றது. ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் உணவை ஆர்டர் செய்த வாடிக்கையாளரான பென் ராபர்ட்ஸ் என்பவர் காபி ஆர்டர் செய்துள்ளார். அதனை ட்ரான் எடுத்து வருகையில் காக்கை ஒன்று ஆவேசமாக ட்ரோனை தாக்கி சேதப்படுத்தி கீழே தள்ள முயற்சித்துள்ளது.

    ட்ரோனை அதன் அலகால் குத்தி ஆக்ரோஷமாக தாக்கிய பின்னர் சாதனத்தின் பின்புறத்தில் காக்கை தொங்குவதை வாடிக்கையாளர் படம் பிடித்துள்ளார். காகத்தின் தாக்குதளுக்குப் பிறகு பறக்க ட்ரோன் போராடியுள்ளது.

    ட்ரோன்களின் சேவையின் கீழ் பணிபுரிபவர் இது குறித்து தெரிவிக்கையில், ட்ரோன்கள் பொதுவாக மற்ற புறநகர்ப் பகுதிகளில் இயங்குகின்றன. அவற்றின் காரணமாக எந்தப் பறவைகளும் காயமடைந்தாக இதுவரை எதுவும் இல்லை என கூறியுள்ளார்.



    ஆளில்லா குட்டி விமானங்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.



    சமீபத்தில் கழுகு ட்ரோனைப் பற்றிக்கொண்டு அதனுடன் எப்படி பறந்தது என வீடியோவும், படங்களுக்கும் இணையத்தில் வைரலானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: