Video | ஜாகுவார் காரை தந்தை வாங்கித்தராததால் தனது BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்!

ஆற்றில் கார் அடித்துச் செல்லப்படும் காட்சியையும் வீடியோவாக தனது செல்போனில் அவர் படம்பிடித்துள்ளார்.

news18
Updated: August 10, 2019, 10:31 AM IST
Video | ஜாகுவார் காரை தந்தை வாங்கித்தராததால் தனது BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்!
வீடியோ காட்சிகள்
news18
Updated: August 10, 2019, 10:31 AM IST
அரியானாவில் தான் கேட்டு தந்தை ஜாகுவார் கார் வாங்கித்தராததால், ஆத்திரத்தில் தனது BMW காரை இளைஞர் ஒருவர் ஆத்திரத்தில் ஆற்றின் உள்ளே தள்ளியுள்ளார்.

அரியானா மாநிலத்தின் யமுனா நகர் பகுதியைச் சேர்ந்த நிலக்கிழார் ஒருவரிடம் அவரது மகன் ஜாகுவார் கார் கேட்டுள்ளார். ஆனால், தந்தை ஜாகுவார் கார் வாங்கித்தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தனது BMW காரை அங்குள்ள ஆற்றில் இறக்கியுள்ளார்.

ஆற்றில் கார் அடித்துச் செல்லப்படும் காட்சியையும் வீடியோவாக தனது செல்போனில் அவர் படம்பிடித்துள்ளார். ஆனால், ஆற்றின் நடுவே கார் சிக்கிக்கொண்டு நின்றது. இதனை அடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு குவியத்தொடங்கினர். இதனால், என்ன நினைத்தாரோ தெரியவில்லை? காரை மீட்கும் முயற்சியில் இளைஞர் ஈடுபட்டார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...