Home /News /trend /

யாரு இடத்துல வந்து யார் சீன் போடுறது... செஞ்சுருவோம் .. மனிதர்களை ஓட விட்ட யானை - வைரல் வீடியோ

யாரு இடத்துல வந்து யார் சீன் போடுறது... செஞ்சுருவோம் .. மனிதர்களை ஓட விட்ட யானை - வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video : யானைகளை காண காட்டிற்குள் வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகளை யானைகள் விரட்டியடித்து ஓட விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    காடுகளில் யானைகளைக் காண கேமராவும் கையுமாக காட்டின் உள்ளே வாகனத்தில் பயணம் செய்ய புறப்பட்ட மனிதர்களுக்கு யானைகள் கூடி மிரட்டல் விடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் காடுகளில் நடக்கும் சில சுவாரசிய சம்பவங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்விதம் தற்போது யானை ஒன்றின் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் காட்டின் உள்ளே விலங்குகளை காண சுற்றுலாப் பயணிகள் சிலர் கூட்டமாக வாகனங்களில் பயணம் செய்கின்றனர்.

    பயணம் செய்யும் போது யானையின் அருகில் தங்களது வாகனத்தை கொண்டு செல்கின்றது. இதனை பார்த்துக்கொண்டிருந்த இரண்டு யானைகள் கம்பீரமாக தும்பிக்கையை வைத்து வாகனத்தை தலைகீழாக கவிழ்த்து விட்டு உறுமுகின்றது. வாகனத்தின் உள்ளே இருந்தவர்கள் உடனே எழுத்து ஓட்டம் பிடிக்கின்றனர். நல்லவேளையாக யானை யாரையும் காயப்படுத்த வில்லை. உயிர்சேதம் ஏதும் இல்லை. இவை அனைத்தையும் பின்னல் இருந்த வாகனத்தில் வந்தவர்கள் சற்று தூரம் தள்ளி நின்று பார்த்துக்கொண்டு உள்ளனர்.





    இந்த வீடியோ குறித்த தலைப்பில் இந்திய வனத்துறை அதிகாரி அவர்கள் அதிஷ்ட சாலிகள். எனினும் அனைத்து நேரங்களிலும் அதிர்ஷ்டம் வேலை செய்யாது. காடுகளை மதிப்போம். எப்போதும் பாதுகாப்பான தூரம் தள்ளி நிற்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி