• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கர்நாடகா வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை துரத்திய யானை - வைரலாகும் வீடியோ!

கர்நாடகா வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை துரத்திய யானை - வைரலாகும் வீடியோ!

கர்நாடகா வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை துரத்திய யானை

கர்நாடகா வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை துரத்திய யானை

சுற்றுலாத்துறைவனயில் விலங்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வனத்துறையினருக்கு இயற்கை பாதுகாப்பு வல்லுநர்கள் அடிக்கடி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
விலங்குகளின் நடத்தை கணிக்க முடியாதது என்று சமீபத்திய சம்பவத்தில் உறுதியாக தெரியவந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் குழுவினர் சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள வனப்பகுதிக்கு சஃபாரிக்கு சென்றனர்.

ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஒரு வீடியோவில் இந்த சம்பவங்கள் அடங்கிய கிளிப் உள்ளது. அந்த வீடியோவில், காட்டுக்குள் ஒரு யானை சஃபாரி வண்டியை துரத்துவது தெரிகிறது.

வண்டியின் பின்னால் யானை ஓடி வரும் திகிலூட்டும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. ஆனால் ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல் ஓட்டி செல்கிறார். வாகனம் தனது பயணிகளுடன் பாதுகாப்பாக செல்வதற்கு முன்பு மற்றொரு யானையை எதிர்கொண்டது. முதலில் வாகனத்தின் பின்னால் வந்த யானை வாகனத்தை துரத்துவதை நிறுத்தும்போது, சம்பவத்தை பதிவு செய்யும் கேமரா வாகனத்தின் முன்புறம் திரும்புகிறது. அப்போது வாகனத்தின் முன்னால் இன்னொரு யானை உள்ளது. ஆனால் ஓட்டுநர் தனது அமைதியை இழக்காமல் வாகனத்தை பொறுமையாக கையாளுகிறார். ஓட்டுநர் வாகனத்தை மெதுவாக ரிவெர்ஸில் ஓட்டி செல்கிறார்.

ஆனால் சிறிது நேரம் கழித்து யானை முன்னால் ஓடுவதை நிறுத்திவிட்டு நின்று வாகனத்தை நோக்கி திரும்பியது. இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் அலறுவதை வீடியோவில் நன்றாக கேட்க முடியும்.

யானை மீண்டும் திரும்பி பாதை வழியாக முன்னோக்கி ஓடிய பின்னர் வாகனம் அதன் வழியில் செல்கிறது. வீடியோவின் முடிவில், நான்கு-ஐந்து யானைகள் புதர்களில் அருகிலேயே மேய்ந்து கொண்டிருக்கும் காட்சிகளும் அடங்கியுள்ளது.

மைசூரு மாவட்டத்தில் உள்ள பி.ஆர். ஹில்ஸ் வீச்சு காடுகளில் இந்த சம்பவம் நடந்ததாக கர்நாடகாவின் மூத்த அதிகாரிகள் கூறியதாக நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் கமெண்ட் செய்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள்அங்கு சென்றது தவறு என சிலர் கூறினாலும், யானைகள் அவர்களை துரத்தியது பயமாக உள்ளது என பலர் கமெண்ட் செய்திருந்தனர்.

இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள யூசர் ஒருவர்,



# யானைகளால் மோசமாக உணர்ந்தேன், சுற்றுலாப் பயணிகள் இது போன்ற யானைகளை விரட்டக்கூடாது, இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கோபமடையும் யானைகள் மனிதர்களை தாக்கும்., இதுபோன்ற மனித நடத்தை #man_elephant மோதலுக்கு காரணமாகும் என்றார்.



மற்றொருவர் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் இதுபோல சஃபாரிகள் செய்யக்கூடாது. நீங்கள் விலங்குகளிடம் இருந்து திரும்பி ஓடத் தொடங்கும் போதெல்லாம், அவைகள் வலிமையானவைகளாக உணர்வார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் திறந்த ஜீப்பில் சஃபாரி செல்வது எல்லா இடங்களிலும் நடக்கிறது, இது தவறானது என மற்றொரு யூசர் தெரிவித்துள்ளார்.

Also read... கோக்கைன்னுக்கு அடிமையாவது போல கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் அடிமையாகும் மக்கள்: MIT வெளியிட்ட ஆய்வறிக்கை!

சுற்றுலாத்துறைவனயில் விலங்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வனத்துறையினருக்கு இயற்கை பாதுகாப்பு வல்லுநர்கள் அடிக்கடி கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: