ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மாயன் பிரமிடில் ஏறி குத்தாட்டம் போட்ட பெண்... ஆத்திரமடைந்து அடி வெளுத்த ஊர்மக்கள்!

மாயன் பிரமிடில் ஏறி குத்தாட்டம் போட்ட பெண்... ஆத்திரமடைந்து அடி வெளுத்த ஊர்மக்கள்!

மாயன் பிரமிடு

மாயன் பிரமிடு

பெண் ஒருவர் மாயன் பிரமிட்டில் ஏறியுள்ளார். அதை ஒருவர் கீழே இருந்து படம்பிடித்துக்கொண்டு இருந்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai |

  மெக்சிகோவில் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் புனித மாயன் பிரமிடில் சட்டவிரோதமாக ஏறியதால் உள்ளூர் மக்களால் தாக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  மெக்ஸிகோ சிச்சென் இட்சா பகுதியில் அமைந்துள்ள எல் காஸ்டிலோ (தி கோட்டை) என்றும் அழைக்கப்படும் குகுல்கன் பிரமிடு மாயா மக்களால் கி.பி 800-900 க்கு இடையில் கட்டப்பட்டது. இந்த நான்கு பக்க பிரமிடு சுமார் 78 அடி உயரத்தில் உள்ளது மற்றும் மேல் ஒரு கோவில் உள்ளது

  சுற்றுலாப் பயணி ஒருவர் படிக்கட்டில் இருந்து விழுந்து இறந்ததை அடுத்து , மெக்சிகோவின் தேசிய மானுடவியல் மற்றும் வரலாறு நிறுவனம் (INAH) 2008 முதல் சுற்றுலாப் பயணிகள் பிரமிட்டில் ஏறுவதைத் தடை செய்துள்ளது.

  இதையும் படிங்க: ரூ.26க்கு வகைவகையாக சாப்பாடு.. பில்லைப் பார்த்து பெருமூச்சுவிடும் இளைய தலைமுறை!

  அதை மீறி பெண் ஒருவர் மாயன் பிரமிட்டில் ஏறியுள்ளார். அதை ஒருவர் கீழே இருந்து படம்பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். ஏறியது மட்டும் இல்லாமல் உச்சிக்கு சென்ற அந்த பெண் மேலே நின்று நடனம் ஆடியுள்ளார்.

  இதை கவனித்த மற்ற சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வாசிகளும் அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் அவர் பிரமிட்டின் மேலே இருந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மக்கள் கீழே இருந்து கோஷம் எழுப்பினர். கற்களை கொண்டு அந்த பெண்ணைத் தாக்கத் தொடங்கினர்.

  பின்னர் அந்த இடத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளால் அந்தப் பெண் கீழே வரழைக்கப்பட்டார். கீழே இறங்கியதும் ,ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகளின் கூட்டம் அவரை அடிக்கத் தொடங்கியதால் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

  மேலும் அவரை கைது செய்யக் கோரி "கார்செல்" என்று கூச்சலிட்டனர். ஸ்பானிஷ் மொழியில்கார்செல் என்றால் சிறை என்று பொருள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இடத்தின் மீதான மரியாதை குறித்து விவாதங்களும் நடந்து வருகிறது.


  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Mexico, Trending Video