இங்கிலாந்தில் தம்பதிகள், வீட்டின் சமையல் அறையில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர். அவை ரூ.6.8 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வடக்கு யார்க்ஷயர் பகுதியில் 10 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் மனைவி வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு வீட்டைப் புதுப்பிக்க வேலைப்பாடுகள் நடந்ததுள்ளது. அப்போது சமையல் அறையில் தோண்டிய போது 6 அடியில் சிறிய கேன் கிடைத்துள்ளது. முதலில் அது ஏதோ மின்சாரக் கம்பி என்று எண்ணிய நிலையில் அதில் பல தங்க நாணயங்கள் இருந்துள்ளது.
சுமார் 400 ஆண்டுகள் பழமையான 264 தங்க நாணயங்கள் தம்பதிக்குக் கிடைத்துள்ளது. அதை லண்டனில் உள்ள ஸ்பின்க் & சன் என்ற ஏலம் விடும் நிறுவனத்தில் மூலம் ஏலத்திற்குக் கொண்டுவந்துள்ளனர். அதனின் விலை சுமார் 2.3 கோடி என்று மதிப்பிடப்பட்ட நிலையில் தற்போது மூன்று மடங்கு அதிகமாக ஏலம் விடப்பட்டுள்ளது.
Also Read : இந்த படத்தில் காலியாக இருக்கும் 5 பாட்டில்களை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
அந்த நாணயங்கள் குறித்து ஆய்வு நடத்தியதில் அது 1700களில் வாழ்ந்த வியாபாரியின் குடும்பத்தைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபெர்ன்லி-மாஸ்டர்ஸ் என்ற வணிகம் செய்த பணக்காரக் குடும்பம் அந்த பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் இரும்பு தாது, மரம் மற்றும் நிலக்கரி போன்றவற்றை ஏற்றுமதி இறக்குமதி செய்து வந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்பின்க் & சன் ஏலம் நிறுவத்தின் கிரிகோரி எட்மண்ட் என்ற நபர் இது குறித்துத் தெரிவிக்கையில், இது 292 பழமை வாய்ந்த புதையல் என்று தெரிவித்துள்ளார். அவர் கணித்த விலையை விட மூன்று அதிக அளவில் 6.8 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: London, Viral News