Home /News /trend /

செய்தி வாசிப்பாளர் வாய்க்குள் புகுந்த ஈ... நேரலையில் நடந்த வைரல் சம்பவம்!

செய்தி வாசிப்பாளர் வாய்க்குள் புகுந்த ஈ... நேரலையில் நடந்த வைரல் சம்பவம்!

செய்தி வாசிப்பாளர்  ஃபரா நாசர்

செய்தி வாசிப்பாளர் ஃபரா நாசர்

நேரலையில் வாய்க்குள் ஈ புகுந்ததைக் கூட வெளிக்காட்டிக்கொள்ளாமல் செய்திவாசிப்பாளர் ஒருவர் தொடர்ந்து செய்தி வாசித்துக்கொண்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொதுவாகச் செய்தியாளர்கள் செய்தி வாசிப்பது தொடர்பான வேடிக்கையான வீடியோக்கள் ஆயிரக்கணக்கில் வைரலாகி வந்தாலும், தற்போது சோசியல் மீடியாவில் பெண் செய்தி வாசிப்பாளர் தொடர்பான வீடியோ ஒன்று தாறுமாறு வைரலாகி வருகிறது.

    பிறர் பேசுவதை சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் போது வாயைத் திறந்து கொண்டு உட்கார்ந்திருந்தால், “வாய்க்குள்ள ஈ போய்டப்போகுது” என போகிறப்போக்கில் கிண்டல் செய்வோம். ஆனால் இப்போது நாம் பார்க்கப்போகும் வீடியோவில், செய்தி வாசிப்பாளர் ஒருவர் செய்தி வாசிக்கும் போது வாய்க்குள் ஏதோ புகுந்ததைக் கூட பொருட்படுத்தாமல் செய்தி வாசிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும் விநோதமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் நேரலை ஒளிபரப்பின் போது செய்திகளை வாசிப்பது என்பது ஈசியான காரியம் கிடையாது. பல ஆண்டுகள் திறமை வாய்ந்த செய்தியாளர்கள் கூட சில சூழ்நிலைகளைச் சமாளிக்க முடியாமல் திணறிப்போவார்கள். ஆனால் வாய்க்குள் புகுந்த ஈயையே அசால்ட்டாக எடுத்துக்கொண்டு செய்தி வாசிப்பாளரான ஃபரா நாசர், தனது வேலையைச் சிறப்புடன் செய்து முடித்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோவை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    அந்த வீடியோவில் அவர், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு மற்றும் அதனால் மக்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்த செய்தியை நேரலையில் வாசித்துக்கொண்டிருக்கிறார். அப்போது சட்டென அவருடைய வாய்க்குள் ஒரு ஈ புகுந்து விடுகிறது. ஏதோ ஒன்று தனது வாய்க்குள் புகுந்து விட்டதை உணர்ந்த ஃபரா சில நொடிகளுக்கு அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் அதனைச் சமாளித்துக்கொண்டு செய்தியைத் தொடர்ந்து அதே ப்ளோவில் வாசிக்கிறார்.

    Also Read : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டூ சச்சின் வரை.. வைரலாகி வரும் ஒரு வார்த்தை ட்வீட் உருவான கதை.!

    நகைச்சுவைக்காக இந்த வீடியோவை பகிர்ந்துள்ளதாகப் பதிவிட்டுள்ள ஃபரா, இன்று காற்றில் பறந்து வந்த ஈ ஒன்றை விழுங்கிவிட்டேன் என டேக் லைன் கொடுத்துள்ளார். பார்க்க மிகவும் வேடிக்கையான மற்றும் விநோதமான இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். 2,000 அதிகமான லைக்குகளையும், 200க்கும் மேற்பட்ட கமெண்ட்களையும் பெற்று இந்த வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

    இணையத்தில் ஒருவர் “அது பழ ஈயா? வீட்டு ஈயா?” எனக் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஃபரா “வழக்கமான ஈ தான்... அந்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது” எனப் பதிலளித்துள்ளார். சிலர் சிரித்து, சிரித்து வயிறு வலிப்பதாகவும், சிரிப்பை அடங்கமுடியாமல் செத்துவிடுவேன் என நினைக்கிறேன் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு ஃபரா “உங்களுக்குச் சேவையாற்றியதில் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Female news reader, Video gets viral, Viral Videos

    அடுத்த செய்தி