ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த நிகழ்ச்சி.. தேதி, இடம் முழு விவரம் இதோ!

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த நிகழ்ச்சி.. தேதி, இடம் முழு விவரம் இதோ!

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்

பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா ராதிகாவின் லெஹங்காவை வடிவமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு விரைவில் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருடன் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களுக்கு நிச்சயதார்த்த நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.

நேற்று இருவருக்கும் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. என்கோர் ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள்தான் ராதிகா மெர்ச்சன்ட். கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள அந்நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த லெஹங்கா அனைவரையும் கவர்ந்துள்ளது.

பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா ராதிகாவின் லெஹங்காவை வடிவமைத்துள்ளார். வண்ணங்கள் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கலர்ஃபுல் நிறத்தில் அந்த ஆடையை வடிவமைத்திருந்ததே அதன் தனித்துவம்.
 
View this post on Instagram

 

A post shared by Akash Ambani (@akashambani_fc)இந்நிலையில் நாளை, ‘கொல் தானா’ என அழைக்கப்படும் பிரம்மாண்ட நிச்சயதார்த்த விழா, மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ஆண்டிலா இல்லத்தில் நடைபெறவுள்ளது. நாளை மாலை 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி  நடைபெறுகிறது

First published:

Tags: Ambani house, Mukesh ambani, Radhika