Anand Mahindra: இயற்கை உருவாக்கிய நீச்சல் குளம் - வியக்கும் ஆனந்த் மகேந்திரா!

ஆனந்த் மகேந்திரா

சித்தார்த் பக்காரியா ஹிமாச்சல் என்பவரின் டிவிட்டர் பதிவை பகிர்ந்துள்ள ஆனந்த் மகேந்திரா, 'என்ன அழகு..! இதுபோன்றதொரு நீச்சல் குளத்தை நான் இதுவரை பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

  • Share this:
இயற்கையின் படைப்பில் கற்களுக்கு நடுவே இருக்கும் நீச்சல் குளம் ஒன்றின் புகைப்படத்தைப் பார்த்து ஆனந்த் மகேந்திரா வியந்துள்ளார்.

இந்தியாவின் முக்கிய தொழில்திபர்களில் ஒருவரான ஆனந்த் மகேந்திரா, டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். தனக்கு பிடித்த வீடியோ மற்றும் தகவல்களை பகிரும் அவர், தற்போது இயற்கையின் படைப்பில் உருவாகியிருக்கும் நீச்சல் குளத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில் இருக்கும் குளம் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ள மகேந்திரா, இதுபோன்ற நீச்சல் குளத்தை இதுவரை பார்த்ததில்லை என வியந்துள்ளார். தன்னுடைய பயண குறிப்பில் அந்த இடமும் இடம்பெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். புகைப்படத்தை பகிர்ந்த நெட்டிசனிடம், கற்களுக்கு நடுவே அமைத்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் நீச்சல் குளம் எங்கிருக்கிறது? என்றும் வினவினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



சித்தார்த் பக்காரியா ஹிமாச்சல் என்பவரின் டிவிட்டர் பதிவை பகிர்ந்துள்ள ஆனந்த் மகேந்திரா, 'என்ன அழகு..! இதுபோன்றதொரு நீச்சல் குளத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. என்னுடைய பயணக்குறிப்பில் இந்த இடம் இடம்பெற்றுவிட்டது. சித்தார்த் பக்காரியா அவர்களே, இந்த நீச்சல் குளம் எங்கு உள்ளது என தெரியப்படுத்துங்கள்" எனக் கேட்டுள்ளார்.

அவரின் பதிவுக்கு பதில் அளித்த பக்காரியா, என்னுடைய டிவிட்டர் பதிவை பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி சார் எனத் தெரிவித்துள்ளார். உத்தரக்காண்ட் மாநிலத்தில் தார்ச்சுலா மாவட்டத்தில் உள்ள கெலா என்ற கிராமத்தில் இந்த இயற்கையான நீச்சல் குளம் அமைத்திருப்பதாக தெரிவித்த பக்காரியா, இந்தியா - நேபாளம் எல்லைக்கு மிக அருகில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



இயற்கையின் படைப்பில் உருவாகியிருக்கும் கொள்ளை அழகு கொண்ட நீச்சல் குளம் குறித்த தகவல்களை, தனிப்பட்ட மெசேஜூக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பக்காரியா கூறியுள்ளார். ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த இந்தப் பதிவு தற்போது பலரது சுற்றுலா லிஸ்டிலும் இடம்பெற்றுள்ளது. அவருடைய கமெண்ட் பகுதியில் தாங்களும் அந்த இடத்துக்கு செல்ல ஆர்வமாக இருப்பதாக பலர் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரத்தில், ஆனந்த் மகேந்திரா அங்கு செல்ல வேண்டாம் எனவும் சில இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்தப் பகுதி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாக கூறியுள்ள அவர்கள், ஆனந்த் மகேந்திரா அங்கு சென்றால் அந்த நீச்சல் குளம் சுற்றுலா தளமாக மாறிவிடும், பின்னர் அந்த நீச்சல் குளம் மற்றும் அந்த பகுதிகள் மாசடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் அங்கு சென்றாலும் நீச்சல் குளம் பற்றிய தகவல்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Also read... ரயில்வேயின் முதல் அக்வாட்டிக் பூங்கா - பெங்களூரு ரயில் நிலையத்தில் 12 அடி நீள சுரங்கப்பாதை!

ஆனால், சித்தார்த் பக்காரியா கிராமத்தின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டதால் பயணத்தை மட்டுமே வாடிக்கையாக வைத்திருப்பவர்கள் அங்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த டிவிட்டர் பதிவு சுமார் 5,800 லைக்குகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகிர்வுகளையும் பெற்றுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: