முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / அடடா... ராட்சத மரங்களை வைத்து மனிதர்களுக்கு வாழ்க்கை பாடம் எடுத்த ஆனந்த் மஹிந்திரா!

அடடா... ராட்சத மரங்களை வைத்து மனிதர்களுக்கு வாழ்க்கை பாடம் எடுத்த ஆனந்த் மஹிந்திரா!

ராட்சத மரங்களை வைத்து மனிதர்களுக்கு வாழ்க்கை பாடம் எடுத்த ஆனந்த் மஹிந்திரா!

ராட்சத மரங்களை வைத்து மனிதர்களுக்கு வாழ்க்கை பாடம் எடுத்த ஆனந்த் மஹிந்திரா!

Anand Mahindra | தனது பிசியான வேலைகளுக்கு நடுவிலும், திறமையாளர்களை பாராட்டுவதற்கும், இந்தியாவின் பெருமைகளை பறைசாற்றும் நிகழ்வுகளை பகிர்வதற்கும் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார். அதேபோல் சமூகத்திற்கு ஊக்கமளிக்க கூடிய வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலகிலேயே மிகவும் உயரமான மரத்தின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா, அதன் மூலமாக மனித இனத்திற்கு அற்புதமான வாழ்க்கை பாடத்தையும் நடத்தியுள்ளார்.

டிவிட்டர் பயன்படுத்தும் பலருக்கும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கார் நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மஹிந்திரா எந்த அளவுக்கு துடிப்போடு செயல்பட்டு வருகிறார் என்பது தெரிந்திருக்கும். தொழில் தொடர்புடைய பொறுப்புகளுக்கு மத்தியில் சமூக அக்கறையுள்ள பல பதிவுகள் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர் அவர். தனது பிசியான வேலைகளுக்கு நடுவிலும், திறமையாளர்களை பாராட்டுவதற்கும், இந்தியாவின் பெருமைகளை பறைசாற்றும் நிகழ்வுகளை பகிர்வதற்கும் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார். அதேபோல் சமூகத்திற்கு ஊக்கமளிக்க கூடிய வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

புதுமையான கண்டுபிடிப்பாளர்களையும், திறமையாளர்களையும் தேடி, தேடி பாராட்டி வரும் ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது மக்களுக்கு பயனுள்ள கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ராட்சத சீக்கோயா மரங்களின் வீடியோவை பகிர்ந்து மனிதர்களுக்கு அழகாக வாழ்க்கைப் பாடம் நடத்தியுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று வொண்டர் ஆப் சயின்ஸ் என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் பருமனான செக்வோயா மரங்களுக்கு நடுவே பெண் ஒருவர் எறும்பை போன்ற சிறிய உருவமாக காட்சியளிக்கிறார். இதன் மூலம் இயற்கையின் அளவு கோலுக்கு முன்னால் மனிதனின் அளவு என்ன என்ற வாழ்க்கை பாடத்தை ஆனந்த் மஹிந்திரா தெளிவுபடுத்தியுள்ளார்.

Read More : அம்மாடியோ!! 50 வருடமாக தினமும் 2 பர்கர் சாப்பிட்டு உலக சாதனை படைத்த அமெரிக்கர்! 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "சவால்களை எதிர்கொள்ளும் போது, ​​இந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். அப்போது நாம் மிகப்பெரிய வாழ்க்கைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதைப் போலவே, இந்த பிரபஞ்சத்தின் ஒரு சிறிய பகுதி தான் நாம் என்பதை நினைவூட்டுவதற்கான சரியான வழியாகும். உங்கள் 'உயரமான' மற்றும் நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். இது திங்கட்கிழமை உந்துவேகம்” என பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் பதிவிட்டுள்ள யூஸர் ஒருவர், “சீக்வோயா மரங்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான உண்மைதான் அவை இவ்வளவு உயரமாக வளரக் காரணம். இந்த மரங்களின் வேர்கள் அனைத்தும் சிக்குண்டு, அவை உயரமாக வளர அனுமதிக்கிறது. அவைகள் ஒன்றாக உயரமாக வளரக் காரணம், அவற்றிற்குள் இருக்கும் உறவும் பிணைப்பும் தான்” என பதிவிட்டுள்ளார்.

ட்விட்டரில் இதுவரை 4,459 பேர் இந்த வீடியோவை கண்டு ரசித்துள்ளனர். 27 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரின் ஆக்கப்பூர்வமான கமெண்ட்களுடன் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Anand Mahindra, Trending, Viral