• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மக்கள் இன்னும் சமூக விலகளுக்கு பழகவில்லை... ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் புகைப்படம்!

மக்கள் இன்னும் சமூக விலகளுக்கு பழகவில்லை... ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் புகைப்படம்!

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் புகைப்படம்

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் புகைப்படம்

இந்தியாவில் தற்போது வரை 1,30,60,542 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருவதால், அரசாங்கங்கள் மற்றும் பிரபலங்கள் வைரஸ் பரவாமல் தடுக்க அடிப்படை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறு மக்களை மீண்டும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்த கொரோனா இப்போது பல பிறழ்வுகளாக உருமாறி இன்னும் மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் தற்போது வரை 1,30,60,542 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,67,642 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 1,19,13,292 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9,79,608 ஆக இருக்கிறது. இருப்பினும், இந்திய மக்களில் கொரோனா பாதிப்பின் அச்சம் சிறிது குறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். பாதிப்புகள் சற்று குறைந்து வந்த காலத்தில் மக்கள் முகக்கவசங்கள், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிப்பதை கைவிட்டனர்.

இதன் காரணமாகவே தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மீறுகிறார்கள் என்பது குறித்த தனது எண்ணங்களையும் அந்த பதிவில் பகிர்ந்து கொண்டனர்.

அவர் பகிர்ந்த புகைப்படத்தில், ஒரு அலுவலகத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகளிடையே சமூக விலகலை ஏற்படுத்த ஒரு கண்ணாடி தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு கவுண்டரில் நின்றுகொண்டிருந்த மனிதர் கண்ணாடி தடுப்பில் அமைக்கப்பட்டிருந்த வட்டவடிவ ஓட்டையில் தன் தலை பாதியை நுழைத்து அலுவலக அதிகாரியை எட்டிப் பார்க்கும் ஒரு படத்தை தொழிலதிபர் பகிர்ந்துள்ளார்.

Also read... சிக்கனுக்கு ஆசைப்பட்ட நாய்க்கு ஏற்பட்ட விபரீதம்...!

அங்கு தொழிலாளர்கள் உட்கார்ந்து வேலை செய்வதைக் காணலாம். அரசாங்க அலுவலகத்திற்குள் எடுக்கப்பட்டது போல தோன்றும் அந்த புகைப்படத்தில் அந்த நபர் முகக்கவசம் எதுவும் அணியவில்லை. இதனை பகிர்ந்த 65 வயதான தொழிலதிபர் " சமூக விலகலுக்கு மக்கள் இன்னும் பழகவில்லை" என்று கேப்ஷன் செய்திருந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப நமது பங்களிப்பை எடுக்க வேண்டிய நேரம் இது. அனைவரும் முகக்கவசங்களை அணிவது அவசியம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அவரின் ட்வீட் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து அதிக லைக்ஸ்களை பெற்றுள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அவரது பதிவை ரீட்வீட் செய்து வருகின்றனர். இதுதவிர பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில், நாடு தினசரி ஒரு லட்சம் கொரோனா வைரஸ் பாதிப்புகளை சந்தித்து வரும் அதே வேளையில் மேற்கு வங்கம், மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் அரசியல் பேரணிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் மக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசங்கள், சானிடைசர்கள், கையுறைகள், சமூக விலகலை காட்டாயம் கைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: