முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / என் கண்களை இந்த வீடியோவிலிருந்து எடுக்க முடியவில்லை - அசர வைத்த ஆனந்த மஹிந்திரா

என் கண்களை இந்த வீடியோவிலிருந்து எடுக்க முடியவில்லை - அசர வைத்த ஆனந்த மஹிந்திரா

Dear (Source:Twitter)

Dear (Source:Twitter)

Viral Video | உலகில் என்ன நடந்தாலும்? எங்கு நடந்தாலும்? சில நொடிகளுக்குள் நம் கண்முன்னே அந்த விஷயங்களை நாம் அறிந்துக்கொள்ள உதவியாக இருப்பது சோசியல் மீடியாக்கள் தான்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காலைப்பொழுதில் அமைதியான சூழலில் துள்ளிக்குதிக்கும் மானின் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டதோடு மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள் வார இறுதி நாளை மகிழ்ச்சியாக்குகிறது என மஹிந்திரா கார் நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மஹிந்திரா டிவிட் செய்த வீடியோவை இதுவரை 7.1 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

உலகில் என்ன நடந்தாலும்? எங்கு நடந்தாலும்? சில நொடிகளுக்குள் நம் கண்முன்னே அந்த விஷயங்களை நாம் அறிந்துக்கொள்ள உதவியாக இருப்பது சோசியல் மீடியாக்கள் தான். பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என வளர்ந்துவரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப மக்கள் தங்களை அப்டேட் செய்து கொள்கின்றனர். தற்போது சோசியல் மீடியாக்களை சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள், முன்னணி நிறுவன அதிபர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக ட்விட்டர் பயன்படுத்தும் பலரும் அடிக்கடி மஹிந்திரா கார் நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்களைப் பார்க்காமல் நிச்சயம் இருக்க முடியாது அந்த அளவிற்கு எப்போதும் துடிப்போடு செயல்பட்டு வருகிறார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெரும்பாலும், திறமையான நபர்களை பாராட்டுவது தொடங்கி இந்தியாவின் பெருமைகளை பறைசாற்றும் விஷயங்கள் மற்றும் உலகில் நடக்கும் பல சுவாரஸ்சியமான விஷயங்களையெல்லாம் ட்விட் செய்துவருகிறார்.

அப்படிப்பட்ட ஒரு ட்விட் வீடியோ தான் கடந்த வார இறுதியில் இணையத்தளத்தை கலக்கியுள்ளது. பொதுவாக மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, வன விலங்குகள் மற்றும் இயற்கையின் மீது அதிக ஈடுபாடோடு இருக்கும் நிலையில் தான், காலைப்பொழுதில் யாரும் இல்லாத கடற்கரையில் மகிழ்ச்சியில் துள்ளிஓடும் மானின் வீடியோவை ட்வீட் செய்துள்ளார்.

மேலும் இந்த வீடியோ தன்னை மெய்சிலிர்க்க வைக்கிறது எனவும், என் கண்களை அதிலிருந்து எடுக்கமுடியவில்லை. 12 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ காட்சிகளை திரும்ப திரும்ப பார்க்கிறேன் எனவும் இந்த ஞாயிறு உயிருடன் இருப்பதை கொண்டாடும் நாளாகும் என்பதையும் இது எனக்கு உணர்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : ஓனரை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுத ஆடு... கல்லான மனதையும் கலங்க வைக்கும் வீடியோ

இந்த வீடியோவானது தெற்கு இங்கிலாந்தின் டோர்செட்டில் உள்ள கடலோர நகரமான பூலில் உள்ள வைட்கிளிஃப் பூங்காவில் உள்ள கடற்கரையில் எடுக்கப்பட்டுள்ளது. காலை நடைப்பயணத்திற்காக கடற்கரைக்கு சென்ற அப்பகுதியை சேர்ந்த டேவ் மோட் என்பவர் தான் இதனை கியூட்டாக பதிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த வீடியோவை தான் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா ரீட்விட் செய்துள்ளார். இதுவரை மஹிந்திரா ட்விட் செய்த வீடியோவை 7.1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

மேலும் இந்த வீடியோவை பார்த்த ட்விட்டர் யூசர் ஒருவர், மானின் துள்ளல் மனதை இதமாக்குகிறது. வாழ்க்கையில் என்ன நடந்தாலும் முன்னோக்கி நகரும் எண்ணத்தை நமக்கு பிரதிபலிக்கிறது என தெரிவித்திருந்தார்.

Also Read : கொட்டும் அருவி மீண்டும் முகடுக்கே பறக்கும் அரிய இயற்கை காட்சி! -வீடியோ

கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணங்களின் பிரதிபலிப்பாக உள்ளது எனவும் காட்சிகளை எடுத்த ஒளிப்பதிவாளர் ரசிப்பது போன்று நானும் ரசிக்கிறேன் என பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவிட்டதோடு, சிரிப்பது மற்றும் வியப்புடன் பார்ப்பது போன்ற ஈமோஜிகளையும் ட்விட் செய்து வருகின்றனர். மேலும் Happy Sunday sir எனவும் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு தருணங்களையும் மகிழ்ச்சியுடன் கடந்துச்செல்ல வேண்டும் என்பது போன்ற உணர்ச்சிமிக்க ட்விட் கருத்துக்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர்.

வழக்கமாக ஆனந்த் மஹிந்திராவின் ஒவ்வொரு டிவிட்களும் இணையத்தில் வைரலாவது போன்று மானின் துள்ளல் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Anand Mahindra, Trending, Viral Video