வாழை விவசாயிகளுக்கு உதவ ஆனந்த் மஹிந்திரா செய்த செயல்... ட்விட்டரில் குவியும் பாராட்டு...!

"வாழை விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் தனது தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வாழை இலையில் உணவு அளித்த செயல் ட்விட்டரில் அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது"

வாழை விவசாயிகளுக்கு உதவ ஆனந்த் மஹிந்திரா செய்த செயல்... ட்விட்டரில் குவியும் பாராட்டு...!
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா
  • Share this:
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, வாழை விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் தனது தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வாழை இலையில் உணவு அளித்த செயல் ட்விட்டரில் அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஓய்வு பெற்ற பத்திரிகையாளர், பத்மா ராம்நாத் எனக்கு ஒரு மெயில் அனுப்பினார். அதில் எனது கேன்டீனில் உள்ள தொழிலாளர்கள் உணவருந்தும் தட்டுகளுக்கு பதிலாக வாழை இலை பயன்படுத்தினால் போராடி விளை பொருட்களை விற்பனை செய்யும் வாழை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

அவர் யோசனையின் படி எனது தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களுக்கு, இவ்விதம் வாழை இலையில் உணவு வைக்கப்பட்டுள்ளது. நன்றி என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அதற்கான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். பலரும் ஆனந்த் மஹிந்திராவின் இந்த செயலுக்கு ட்விட்டரில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 


First published: April 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading