ட்விட்டரில் புதிரான புகைப்படத்தை பகிர்ந்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா!

ஆனந்த் மஹிந்திரா

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட் பதிவுகள் பெரும்பாலும் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ஒரு கலகலப்பை உருவாக்குகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வித்தியாசமாக, நகைச்சுவையாக ட்விட் செய்வதில் ஆர்வமுள்ளவர். நகைச்சுவை ததும்பும் மீம்ஸ்களை ஷேர் செய்வது, லாக்டவுன் ட்ரெண்ட்ஸ் குறித்து கருத்து தெரிவிப்பது வரை ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட் பதிவுகள் பெரும்பாலும் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ஒரு கலகலப்பை உருவாக்குகின்றன.

சமீபத்தில் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் தன்னை பின்தொடரும் அனைத்து மில்லினியல்களுக்குமான (millennial) டாஸ்க் ஒன்றை ஷேர் செய்தார். அதில் ஒரு புதிரான புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த பொருள் என்ன என்பதை அடையாளம் காண முடிகிறதா.? எந்தவொரு மில்லினியல்களாலும் இது அடையாளம் காணப்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மில்லினியல் என்ற வார்த்தை 1981 மற்றும் 1996க்கு இடையில் பிறந்த குறிப்பாக 2019ல் 23 முதல் 38 வயது நிரம்பிய நபர்களை குறிப்பிட பயன்படுத்தும் ஒரு வார்த்தை ஆகும்.
1997 முதல் பிறந்த எவரும் புதிய தலைமுறையின் ஒரு பகுதியாக உள்ளனர். அவரது ட்விட்டைப் பார்ப்பவர்கள் மில்லினியல்கள் இல்லையென்றால், அவர்களால் புகைப்படத்தை அடையாளம் காண முடியாது என்றும் அவர் கூறினார்.சமீபத்தில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவால் ட்விட்டரில் பகிரப்பட்ட அந்த புகைப்படத்தில் ஒரு கருப்பு பின்னணியில் நகரும் ஒரு புதிரான உலோக பொருளைக் கொண்டுள்ளது. சில்வர் நிறத்தில் கோள வடிவில் இருக்கும் அந்த உலோக பொருள் பைப் போன்ற வடிவிலான சில ஆண்டெனாக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவரது போஸ்ட் இணையத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது மற்றும் நெட்டிசன்களை அந்த பொருள் என்னவாக இருக்கும் என்று யூகிக்க தூண்டியது.

Also read... மகிந்திரா தார்-க்கு சவாலாக மாருதி சுசுகி ஜிம்னி - லீக்கான தகவல்!

இந்த புகைப்படத்தில் இருக்கும் பொருள் என்னவென்று உங்களாலும் அடையாளம் காண முடியவில்லையா.? ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்துள்ள புகைப்படத்தில் இருப்பது மனிதனால் உருவாக்கப்பட்டு பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதலாவது செயற்கை கோள் ஆகும். இதன் பெயர் ஸ்புட்னிக் 1 (Sputnik 1). உலகின் இந்த முதல் செயற்கைகோள் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த கஜகஸ்தானில் உள்ள டியூரட்டத்தில் (சிறிய நகரமான பைகோனூருக்கு தென்மேற்கே 370 கி.மீ) பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து 1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 அன்று ஏவப்பட்டது.

இதன் எடை83 கிலோ மற்றும் 23 அங்குல அகலம் கொண்டது. இது இன்றைய முக்கிய செயற்கைக்கோள்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியது. இந்த நிகழ்வு சோவியத் யூனியனுக்கு ஒரு உயர் மைல்கல்லாக இருந்தது மட்டுமல்லாமல், இன்று விண்வெளி யுகம் என்று அழைக்கப்படும் தொடக்கத்திற்கும் காரணமாக அமைந்தது. பலர் இந்த புகைப்படத்தை கண்டறியும் முயற்சியில் தவறான யூகங்களைச் செய்தனர், ஏராளமான மக்கள் அதை பூமியின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் 1 என்று சரியாக யூகித்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: