கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்ததும் நானும் இதேபோன்று தான் நடந்துகொள்வேன்... ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட வீடியோ!

ஆனந்த் மஹிந்திரா

கொரோனாவிடம் இருந்து எப்போது சுதந்திரம் கிடைக்கும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கிடக்கிறோம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொற்றுநோய் பிடியில் உலக மக்கள் அனைவரும் சிக்கி தவித்து வரும் சூழலில், எப்போது இந்த நிலைமை சரியாகி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவோம் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம். கொரோனாவிடம் இருந்து எப்போது சுதந்திரம் கிடைக்கும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கிடக்கிறோம். இந்த நிலையில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்ததும் அவர் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதை விளக்க மனதை கவரும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

அந்த வீடியோவில், நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த நாய் ஒன்று சந்தோஷத்தில் துள்ளி குதிப்பதை பார்க்கலாம். இந்த அபிமான வீடியோவைப் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, கொரோனா பாதிப்புகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் போது, இந்த உற்சாகமான நாயைப் போலவே நடந்து கொள்வேன் என்று கூறினார். மேலும் அந்த வீடியோ கிளிப்பில், நாய் உற்சாகத்துடன் குதிப்பதற்கு முன்பு அருகிலுள்ள சூழலை எச்சரிக்கையுடன் பரிசோதிப்பதையும் காணலாம்.இந்த பதிவினை அவர் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை, லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ ஆனந்த் மஹிந்திரா மட்டுமல்ல நாடு எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என ஆவலுடன் காத்திருக்கும் நெட்டிசன்களிடையேயும் பிரதிபலித்தது. அவரின் வீடியோவுக்கு எண்ணற்ற மக்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டுவந்தனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வரும் நேரத்தில் வணிக அதிபரின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை தடுக்கும் முயற்சியாக, புதுடெல்லியில் இந்த வாரத்தின் இறுதி நாட்களில் தேசிய தலைநகரம் ஊரடங்கு உத்தரவின் கீழ் இருக்கும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். எனவே வெள்ளிக்கிழமை (ஏப்.16) இரவு 10 மணி முதல் திங்கள்(ஏப்.19) அதிகாலை 5 மணி வரை மக்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளை தவிர, இந்த காலகட்டத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் பொதுவெளியில் தேவையற்ற நடமாட்டம் தடைசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானம் விற்பனை செய்வது உட்பட அனைத்து அத்தியாவசிய கடைகளும் மூடப்படும் என்று டெல்லி அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேபோல, வார நாட்களில், மால்கள், பார்கள், உணவகங்கள், ஜிம்கள், ஸ்பாக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள் ஆகியவை ஏப்ரல் 30 வரை மூடப்படும் என்றும் டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, கொரோனா தொற்றுக்கு மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவிலும், மே 1ம் தேதி வரை 144 வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன. சரியான காரணமின்றி எந்தவொரு நபரும் பொது இடத்தில் நடமாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மாநில அரசாங்கம் உத்தரவு விதித்துள்ளது.

Also read... 'நமோ நமோ சங்கரா' பாடலுக்கு நடனமாடிய யானை - வைரலாகும் வீடியோ!

முன்னதாக, சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) 2021 ஏப்ரல் 30 வரை இந்தியாவுக்கு வர திட்டமிடப்பட்ட சர்வதேச வர்த்தக பயணிகள் சேவையை தடை செய்வதாக அறிவித்தது. இப்போது, பல மாநில அரசாங்கங்களும் தங்கள் மாநிலத்திற்கும் நுழையும் விமான பயணிகளை நெகடிவ் ஆர்டி-பி.சி.ஆரைக் காட்டுமாறு கேட்டுக் கொள்கின்றன. எனவே, ஒருவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியான பிறகு தான் அவர் மாநிலத்திற்கும் நுழைய அனுமதிக்கப்படுவார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: