ட்விட்டர் பயன்படுத்தும் பலருக்கும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கார் நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மஹிந்திரா எந்த அளவுக்கு துடிப்போடு செயல்பட்டு வருகிறார் என்பது தெரிந்திருக்கும். இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் என்ற மிகப்பெரிய பொறுப்பிற்கு இடையிலும், திறமையாளர்களை பாராட்டுவதற்கும், இந்தியாவின் பெருமைகளை பறைசாற்றும் நிகழ்வுகளை பகிர்வதற்கும் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார்.
அதேபோல் சுவாரஸ்யமான மற்றும் சமூகத்திற்கு ஊக்கமளிக்க கூடிய பயனுள்ள வீடியோக்கள் பலவற்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் கணக்கை 94 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்வதால், அவர் பதிவிடும் ஒவ்வொரு வீடியோக்களும் தாறுமாறு வைரலாகி விடுகின்றனர். தற்போது நான்கு பேர் சாப்பிட்டுக்கொண்டே ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் வீடியோவை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நான்கு இளைஞர்கள் நகரும் மேஜையுடன் கூடிய வாகனத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே பயணிக்கின்றனர். அப்படியே போகிற போக்கில், பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி, அந்த வாகனத்திற்கு எரிபொருளையும் நிரப்பிக் கொள்கின்றனர். அதன் பின்னர் சாப்பிட்டுக்கொண்டே பயணத்தை தொடருகின்றனர்.
இந்த வீடியோவை பதிவிட்டுள்ள தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, 'இது இ-மொபிலிட்டி என்று நினைக்கிறேன். 'e' என்பது சாப்பிடுவதைக் குறிக்கிறது...' ("I guess this is e-mobility. Where 'e' stands for eat...") என காமெடியாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. இந்த வீடியோ 1.8 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் யூசர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 35,100 பேர் லைக் செய்துள்ளனர், 3884 பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.
Also Read : இந்த 5 தீவு நாடுகளையும் விசா இல்லாமல் இந்திய பாஸ்போர்ட் மூலம் சுற்றி பார்க்கலாம்!
இந்த வீடியோவை கண்டு ரசித்த ட்விட்டர் யூஸரில் ஒருவர், இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பாளரான ஆனந்த் மஹிந்திராவிடம் ‘இதுபோன்ற வாகனத்தை எப்போது தயாரிக்கப்போகிறார்கள்’ என கேட்டுள்ளார். “அப்படியானால், இப்போது பிக் டாடி & 700 ஆகிய வாகனங்கள் இந்திய சந்தையை ஆளும். ஒவ்வொரு நாளும் நீங்கள் எங்களை பெருமைப்படுத்துகிறீர்கள். நான் மேட் இன் இந்தியாவுக்காக தயாராக இருக்கிறேன், ஒரு "மகேந்திரியனாக" இருப்பதை விட என்ன சிறந்தது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நபர் "இந்தியாவில் உள்ள சாலைகள் மற்றும் இங்குள்ள தூசி காரணமாக இப்படியொரு வாகனத்தை இங்கு கொண்டு வருவது என்பது சாத்தியமில்லை” என பதிவிட்டுள்ளார். மேலும் சில நெட்டிசன்களோ “டைனிங் டேபிள் என்பது வீட்டிற்குள் அமர்ந்து சாப்பிட உதவும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அதனையும் ஒரு இருசக்கர வாகனத்தில் பொருத்தி, புதுமையான வகையில் மாற்றி, இப்படியெல்லாம் கூட சாப்பிட முடியுமா என ஆச்சர்யப்படுத்திவிட்டீர்கள்” என பதிவிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.