100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு விஜயம் செய்த மாண்டரின் வாத்துகள்: வைரல் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா!

மாண்டரின் வாத்து

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் சமீபத்தில் சில அழகான வாத்துகளின் வீடியோவை பகிர்ந்து கொண்டார்.

  • Share this:
தற்போதைய சமுதாயத்தில் சோஷியல் மீடியா என்பது பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. உலகின் எந்த மூலைமுடுக்கிலும் நடக்கும் விஷயங்களை பற்றி நாம் வீட்டில் இருந்தபடியே தெரிந்துகொள்கிறோம். அதேபோல, பல திரைத்துறை பிரபலங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் சோசியல் மீடியாவை உபயோகிப்பது மட்டுமல்லாமல், தங்கள் பாலோயர்களுடன் நேரடி தொடர்பையும் ஏற்படுத்தி கொள்கின்றனர்.

அந்த வகையில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை பின்தொடர்பவர்களுடன் சில தகவல்களையும், பிற மகிழ்ச்சிகரமான விஷயங்களையும், வேடிக்கையான நிகழ்வுகளையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். முக்கியமாக அதிசயிக்க வைக்கும் இயற்கை தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது பகிர்வதன் மூலம் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அந்த வகையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் சமீபத்தில் சில அழகான வாத்துகளின் வீடியோவை பகிர்ந்து கொண்டார். இந்த வாத்துக்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அசாமில் மீண்டும் காணப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவை மாண்டரின் வாத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பறவைகள் நிச்சயமாக பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. அஸ்ஸாமுக்கு விஜயம் செய்துள்ள மாண்டரின் வாத்துகள் தொடர்பான வீடியோ ஆரம்பத்தில் எரிக் சொல்ஹெய்ம் (Eric Solheim) என்ற ட்விட்டர் யூசரால் முதன் முதலில் பகிரப்பட்டது. மேலும் அவரது அந்த பதிவு பல லட்சத்திற்கு மேற்பட்ட வியூஸ்களை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, "பிராவோ! ரஷ்யா மற்றும் கிழக்கு சீனாவில் பொதுவாகக் காணப்படும் மாண்டரின் வாத்துகள் சமீபத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸாமில் காணப்பட்டது. இது ஒரு “நேச்சரின் பெயிண்ட்பாக்ஸ்” ,என்றும் கேப்ஷன் செய்துள்ளார்.எரிக் சொல்ஹெய்மின் வீடியோ பதிவை ரீட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா, " இது மிகவும் அழகாக இருக்கிறது. மேலும் நீண்ட காலத்திற்குப் பிறகு வாத்துகள் இந்தியாவிற்கு திரும்பி வருவது உண்மையில் ஒரு நம்பிக்கையான அறிகுறியாக இருக்கிறது. மனிதர்களை இயற்கை இன்னும் கைவிடவில்லை என்பதே இதன் பொருள்" என்று கேப்ஷன் செய்திருந்தார்.அந்த வாத்துகள் தங்கள் உடல் முழுவதும் பல்வேறு வண்ணங்களை பிரதிபலிக்கின்றன. வானவில் வண்ணங்களில் உலவும் அந்த வாத்துகளை பார்ப்பதற்கு கட்டாயம் இரண்டு கண்கள் போதாது. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த இந்த வீடியோவிற்கு பல அருமையான கருத்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. சிலர் வாத்துகளின் அழகில் மயங்கினாலும், சிலர் தங்கள் சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.அதில் ஒரு ட்விட்டர் யூசர் குறிப்பிட்டிருந்ததாவது, “இது மிகவும் அழகாகவும் முற்றிலும் மாறுபட்டதாகவும் இருக்கிறது. இந்த பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கும் நன்றி சார். அசாமை சேர்ந்த எனக்கு இதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது" என்று கூறியிருந்தார்.மற்றொரு யூசர் தனது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டார், அதில், "4 வருடங்கள் என்னுடன் தங்கியிருந்த சிவப்பு வென்ட் புல்புல். உண்மையில் இது என் சிறந்த நண்பர். அது ஒரு மரத்திலிருந்து விழுந்த பிறகு நான் அதை மீட்டேன். ” என்று கூறினார். மேலும் ஒரு யூசர் குறிப்பிட்டதாவது, “சில சமயங்களில் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் அழகான மற்றும் அன்பான விருந்தினர்களைப் பெறுவோம். இயற்கை மிகவும் அன்பானது. சமநிலைப்படுத்துவது பற்றி அவளுக்குத் தெரியும். ” என்று குறிப்பிட்டிருந்தார்.

வீடியோவில், மல்டிகலர் வாத்து முதலில் நீச்சலடிப்பதைக் காணலாம். பின்னர் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து, தண்ணீர் குடிப்பதை காணலாம். வாத்து உடலில் உள்ள வண்ணங்களின் வடிவம் நம்மை மயக்குவது மட்டுமல்லாமல், இயற்கையின் படைப்பை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
Published by:Vinothini Aandisamy
First published: