முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / “செம சூப்பர் டைவ்.. இது போன்ற திறமையுள்ள சிறுவர்களுக்கு உதவுங்கள் - ஆனந்த் மஹிந்திரா ட்விட்.!

“செம சூப்பர் டைவ்.. இது போன்ற திறமையுள்ள சிறுவர்களுக்கு உதவுங்கள் - ஆனந்த் மஹிந்திரா ட்விட்.!

Trending

Trending

Viral Video | சாலையில் அசால்டாக டைவ் அடித்து அக்ரோபாட்டி திறமையை வெளிப்படுத்தும் சிறுவனின் வீடியோவை இணையத்தில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, இவரின் திறமையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா, பல்வேறு பணிகளுக்கிடையே எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பவர். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திறமையுள்ள பலரின் செயல்களைப் பாராட்டுவதோடு, அவர்களுக்கு பல உதவியும் பெற்றுத் தந்துள்ளார் . மேலும் இவர் பகிரும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகும். இதோடு அத்திறமைக்குக் காரணமானவர்கள் நெட்டிசன்களில் வாழ்த்து மழையால் நனைவதோடு, அவர்களுக்கு அத்துறையில் அங்கீகாரத்தையும், புகழையும் பெற்றுத் தரும்.

இந்த வரிசையில் தற்போது ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்துச் சிறுவன் ஒருவர், சாலையில் அசால்டாக டைவ் அடிக்கும் அக்ரோபாட்டிக் திறமையை வெளிப்படுத்தும் வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார். மேலும் அந்தப்பதிவில், இந்தியாவில் உள்ள இது போன்ற திறமையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முறையானப் பயிற்சி அளித்தால் நிச்சயம் இந்தியாவிற்கு தங்கம் உறுதி என தெரிவித்துள்ளார்.

இதோடு தற்போது இந்தியா காமென்வெல்த் 2022 ல் 61 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ள நிலையில், காமென்வெல்த் போட்டிகளில் கலந்துக்கொள்ள இது போன்ற அடுத்த தலைமுறை உருவாகி கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த டிவிட்டர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகும் நிலையில், நெட்டிசன்கள் வாழ்த்துக்களையும், பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். ட்விட்டர் யூசர் ஒருவர், ஆமாம் அசால்ட்டான இச்சிறுவனின் திறமைப் பாராட்டுதலுக்குரியது என்று தெரிவித்துள்ளார். மற்றொரு ட்விட்டர் யூசர் ஒருவர் இத்தகைய திறமைகளை ஆதரிக்கும் வலிமை உங்களிடம் உள்ளது என்றும் இது போன்ற திறமையான இளைஞர்களுக்கு வழிகாட்ட ஒரு அகாடமியை நிறுவுவீர்கள் என்று நம்புகிறேன் என ஆனந்த் மஹிந்திராவின் டிவிட் பதிவிற்கு பதிலளித்துள்ளார்.

Also Read : சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் அனைவரது கவனத்தை ஈர்த்த செல்லக்குட்டி.. போர் புகையில் சதுரங்க போர் கற்ற சிறுமி.!

மேலும் கிராமத்தில் உள்ள இச்சிறுவனின் திறமையைப் பாராட்டிய நெட்டிசன்கள், பல திறமைகளோடு சிறுவர்கள், இளைஞர்கள் என பலர் உள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் பல உதவிகள் சென்றடையவில்லை. எனவே அவர்களுக்கு நம்மால் முடிந்த பல உதவிகளை செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டு வருகின்றனர். “ இதோ வருங்கால உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன், இந்தியா அனைத்திலும் சிறப்பு தான் என டிவிட் செய்துள்ளனர்.அசாத்திய திறமையுள்ள இச்சிறுவனுக்கு முறையானப் பயிற்சி அளித்து இந்திய ஒலிம்பிக் அணியில் இடம் பெற யாராவது உதவ முன் வர வேண்டும் என்பது போன்ற கருத்துக்களையும், பல ஈமோஜிகளையும் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர்.

பொதுவாக ஆனந்த் மஹிந்திரா டிவிட் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாகும் நிலையில், திருநெல்வேலி சிறுவன் அடிக்கும் டைவ் வீடியோவை இதுவரை 865.3 k வியூஸ்களைப் பெற்று இணையத்தில் வைரலாகிறது. கிராமத்தில் வளரும் சிறுவர்கள் முறையான பயிற்சி எதுவும் இல்லாமல் இப்படி பல திறமைகளை தங்கள் வசம் கொண்டிருப்பார்கள். இதுப்போன்ற திறமையுள்ள இளைஞர்களை கண்டறிந்து உதவ அனைவரும் முன்வர வேண்டும்.

First published:

Tags: Anand Mahindra, Trending, Viral Video