மெஜஸ்டிக் யாரு? மஹிந்திரா XUV 500 or புலியா? ஆனந்த் மஹிந்திராவின் சுவாரஸ்ய டிவீட்!

புலி

அண்மையில், அமெரிக்காவில் பெண் ஒருவர் அடுக்கு டிபன் கேரியரை சுமந்து செல்லும் சுவாரஸ்யமான புகைப்படத்தை ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டிருந்தார்.

  • Share this:
இரவு நேரத்தில் சாலையில் உலாவிய புலிகளின் வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, சாலையில் மஹிந்திரா எக்ஸ்.யூ.வி 500 மட்டும் மெஜஸ்டிக் அல்ல எனத் தெரிவித்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தனக்கு விருப்பமான அல்லது பிடித்த விஷயங்களை பார்த்தவுடன் ஷேர் செய்துவிடுவார். அந்தவகையில், இரவு நேரத்தில் சாலைகளில் இரண்டு புலிகள் நடமாடும் வீடியோ ஒன்றை லேட்டஸ்டாக பகிர்ந்துள்ளார். அதில், வனப்பகுதி வழியே செல்லும் சாலையின் ஓரத்தில் இரவு நேரத்தில் உலாவும் இரண்டு புலிகள், திடீரென சாலைக்கு வருகின்றன. அப்போது, அந்தவழியாக சென்ற பயணிகள் வாகனத்தை நிறுத்தி புலிகளின் வருகையை வீடியோவாக பதிவு செய்கின்றனர். சாலையில் நடக்கும் ஒரு புலி, அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இருச்சக்கர வாகனத்தை முகர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.இந்த நிகழ்வு அந்தப் பகுதி வழியாக சென்றவர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. அந்த வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மஹிந்திரா, சாலையில் செல்லும் வாகனங்களில் மஹிந்திரா எக்ஸ்.யூ.வி 500 மெஜஸ்டிக் என நினைத்திருந்தேன், அதுமட்டுமல்ல என கூறியிருக்கிறார். அவரின் இந்த சுவாரஸ்யமான பதிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமான டிவிட்டர் பதிவுகளில் மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்களைப் பற்றி எதுவும் குறிப்பிட மாட்டார்.ஆனால் இந்த முறை மஹிந்திரா எக்ஸ்.யூ.வி 500 மெஜஸ்டிக் என்பதை புலிகளுக்கு உவமையாக குறிப்பிட்டு கூறியது நெட்டிசன்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுத்துள்ளது. தொடர்ச்சியாக அவரின் பதிவுக்கு பலரும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அதில், மஹிந்திரா கொடுத்துள்ள பஞ்சாகனி, மபலேஷ்வர் லொக்கேஷன் தவறானது என குறிப்பிட்டுள்ளனர். விதர்பா பகுதியில் இருக்கும் பென்ச் பகுதி என தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அந்தப் பகுதி வழியாக பயணிக்கும்போது அடிக்கடி புலிகளின் நடமாட்டத்தை பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Also read... ரோபோவைப் போல வேலை செய்யும் தோசை மாஸ்டர் - வைரலாகும் ஆனந்த் மகேந்திராவின் ட்வீட்!

தாங்கள் செல்லும்போது அல்லது பிறர் செல்லும்போது அந்தப் பகுதிகளில் புலி நாடமாடிய வீடியோவையும் பதிவிட்டு வருகின்றனர். அண்மையில், அமெரிக்காவில் பெண் ஒருவர் அடுக்கு டிபன் கேரியரை சுமந்து செல்லும் சுவாரஸ்யமான புகைப்படத்தை ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டிருந்தார். இந்திய நகரங்களில் அதிகம் காணப்பட்ட மற்றும் மக்களால் உபயோகப்படுத்தப்பட்ட அடுக்கு டிபன் கேரியர், தற்போது இந்தியாவில் வழக்கொழிந்துவிட்டது.

ஆனால், அமெரிக்காவின் சென்ட்ரல் பார்க் பகுதியில் பெண் ஒருவர் அடுக்கு டிபன் கேரியர் எடுத்துச் சென்றது வியப்பாக இருக்கிறது என அவர் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த நெட்டிசன்கள், இந்தியர்கள் எங்கு சென்றாலும் பாரம்பரியத்தை மறக்கமாட்டார்கள் என கூறியதுடன், சில சுவாரஸ்யமான புகைப்படங்களையும் பகிர்ந்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published: