• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ரோபோவைப் போல வேலை செய்யும் தோசை மாஸ்டர் - வைரலாகும் ஆனந்த் மகேந்திராவின் ட்வீட்!

ரோபோவைப் போல வேலை செய்யும் தோசை மாஸ்டர் - வைரலாகும் ஆனந்த் மகேந்திராவின் ட்வீட்!

ரோபோவை போல வேலை செய்யும் நபர்

ரோபோவை போல வேலை செய்யும் நபர்

சற்றும் நம்ப முடியாத வகையில் லாவகரமாக அவர் இந்த வேலையை நொடி பொழுதில் செய்து முடித்து விடுகிறார்.

  • Share this:
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வித்தியாசமாக, நகைச்சுவையாக ட்விட் செய்வதில் ஆர்வமுள்ளவர். நகைச்சுவை ததும்பும் மீம்ஸ்களை ஷேர் செய்வது, லாக்டவுன் ட்ரெண்ட்ஸ் குறித்து கருத்து தெரிவிப்பது வரை ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். நீங்கள் பொழுதுபோக்கு மற்றும் புதிய தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிடலாம். வேடிக்கையான ட்வீட்களைத் தவிர இளம் திறமைகளை ஊக்குவிப்பது மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட் பதிவுகள் நெட்டிசன்களையும் கவர்ந்து வருகிறது. சுவாரஸ்யமான வீடியோக்களை பல்வேறு தலைப்புகளின் கீழ் போஸ்ட் செய்யும் ஆனந்த் மகேந்திரா, தற்போது ஒரு ட்ரெண்டிங் வீடியோ ஒன்றை ஷேர் செய்து நெட்டிசன்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார். அதில் சாலையோர கடை ஒன்றில் ஒருவர் தோசை செய்யும் காட்சிகள் அடங்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

28 வினாடிகள் அடங்கிய வீடியோ கிளிப்பில் ஒருவர் அடுப்பில் ஒரே நேரத்தில் நான்கு தோசைகளை ஊற்றி அதன்மீது சில மசாலாக்களை சேர்கிறார். பின்னர் நன்கு வெந்ததும் ஒவ்வொரு தோசையாக எடுத்து அதனை வெட்டி மடித்து தட்டில் வைத்து சற்று தூரமாக இருக்கும் ஒருவருக்கு அனுப்பி வைக்கிறார். அதேபோல மீதி இருக்கும் தோசைகளையும் செய்கிறார். அப்போது ஒரு இயந்திரம் போல மிக வேகமாக பணியாற்றுகிறார்.



சற்றும் நம்ப முடியாத வகையில் லாவகரமாக அவர் இந்த வேலையை நொடி பொழுதில் செய்து முடித்து விடுகிறார். வீடியோவில், "இந்த ஜென்டில்மேன் ரோபோக்களால் கூட முடியாத வேலையை செய்து முடித்துவிடுகிறார். நான் அவரைப் பார்த்து சோர்வாக இருக்கிறேன், மேலும் அவர் தயாரிக்கும் தோசையை பார்த்தால் பசியாகவும் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை ஆனந்த் மகேந்திரா இந்த வீடியாவை ஷேர் செய்திருந்த நிலையில், இதுவரை 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். அவரது ட்விட்டரை பின்தொடரும் பலரும் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர்.

Also read... தங்கத்தில் செய்யப்படும் ஸ்வீட்ஸ்... ஒரு கிலோ ரூ.9000 - எங்கு தெரியுமா?

ஒரு யூசர், இந்த கடையின் பெயர் 'முட்டு தோசை மூலை' என்றும் இது மும்பையின் தாதர் பகுதியில் அமைந்துள்ளது என்றும் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் இந்த வீடியோவை பசியும் தூக்கமும் வரும் வரை பார்த்து கொண்டே இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். அவர்கள் எப்படி வேலையை செய்கிறார்கள் என எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று ஒருவர் தெரிவித்துள்ளார். சிலர் இந்த வீடியோவில் தோசை சுட்ட நபரை பாராட்டி வருவதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: