Home /News /trend /

என்ன ஒரு ஆசீர்வாதம்.. இந்த வீடியோவ பாருங்க - ஆச்சர்யப்பட்ட ஆனந்த் மஹிந்திரா..

என்ன ஒரு ஆசீர்வாதம்.. இந்த வீடியோவ பாருங்க - ஆச்சர்யப்பட்ட ஆனந்த் மஹிந்திரா..

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video : ஆனந்த் மஹிந்திராவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபராகவும், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா சோசியல் மீடியாவில் எவ்வளவு ஆக்டிவாக வலம் வரக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இந்தியா மட்டுமின்றி
உலகம் முழுவதும் ஆக்கப்பூர்வமாகவும், ஆச்சர்யப்படும் வகையிலும் இருக்கும் விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டி வருகிறார்.

சாமானிய மனிதர்களின் சாதனையில் தொடங்கி எவரெஸ்ட் சிகரத்தின் 360 டிகிரி காட்சிகள் வரை ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட அனைத்து வீடியோக்களும் லட்சக்கணக்கில் வியூஸ்களை அள்ளுவதோடு, சோசியல் மீடியாவிலும் வைரலாகி விடுவது வழக்கம். அப்படித்தான் தற்போது ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு குழந்தை தனது தந்தையிடம் அழுவதும், இளையவர் முதல் முதியவர்கள் வரை 5 தலைமுறையினர் வரிசையாக நின்றிருப்பதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க மறுக்கும் குழந்தை சிணுங்கல், அந்த குழந்தையின் தந்தையை அவரது தந்தை பெயர் சொல்லி அழைப்பது போன்ற உணர்வுபூர்வமான காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.


குழந்தை, அதன் தந்தை, அவரது தந்தை என மொத்தம் 5 தலைமுறையினரும் அணிவகுத்து நின்று போட்டோ எடுத்துக் கொள்ளும் இந்த வீடியோவை காணும் போது இதழ் ஓரம் ஒரு சின்ன புன்னகை எட்டிப்பார்ப்பை உங்களால் தவிர்க்க முடியாது.

also read : வைரலாகும் மிக அரிதான வெள்ளை நிற கங்காரு புகைப்படம்!

இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், “என்ன ஒரு ஆசீர்வாதம். 5 தலைமுறைகள் ஒன்றாக. உலகெங்கிலும் உள்ள எத்தனை குடும்பங்கள் தாய் மற்றும் தந்தை வழியில் அல்லது இருவரது வகையிலும் 5 தலைமுறைகளின் இந்த அரிய பாக்கியத்தைன் ஒன்றாகக் கொண்டிருக்க முடியும் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். இந்தியாவில் இருந்து இதுபோன்ற வீடியோவைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.



also read : மது போதையில் திருமணம் செய்து கொண்ட 2 ஆண்கள் - அடுத்து தான் செம ட்வீஸ்ட்..!

ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த இந்த 9ம் தேதி இந்த வீடியோவை பகிர்ந்த பின்னர், அது இதுவரை 5.2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.குடும்ப உறவுகளுக்கு இடையிலான பிணைப்பு மற்றும் பந்தத்திற்கு உதாரணமாக உலக மக்கள் பலரும் போற்றிப் புகழ்ந்து வருகிறது. இந்நிலையில் 5 தலைமுறைகளைக் கொண்ட ஒரே ஒரு வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்து ஆனந்த் மஹிந்திரா இந்தியாவை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். சில நெட்டிசன்கள் தங்களது குடும்பத்தில் எத்தனையாவது தலைமுறையினர் வாழ்கின்றனர் என்பது பற்றியும், 5 தலைமுறையாக இருப்பவர்கள் அதுதொடர்பான புகைப்படங்களையும் ஆனந்த் மஹிந்திராவிற்கு ஷேர் செய்து வருகின்றனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Anand Mahindra, Viral Video

அடுத்த செய்தி