• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • “பெரிய பயணங்களும் முதல் அடியிலே தொடங்கும்”- ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்த மோட்டிவேஷனல் வீடியோ!

“பெரிய பயணங்களும் முதல் அடியிலே தொடங்கும்”- ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்த மோட்டிவேஷனல் வீடியோ!

எப்படியும் தன்னால் சுவரின் மீது ஏறி மேலே சென்று விட முடியும் என்ற நம்பிக்கையில் சிறிதும் மனம் தளராமல் கரடுமுரடான பிடிகளில் தனது கை மற்றும் கால்களை பயன்படுத்தி அக்குழந்தை தொடர்ந்து சுவரின் மீதேறி முன்னேறி கொண்டே செல்கிறது.

  • Share this:
எவ்வளவு பெரிய ஜாம்பவான்களுக்கும் சில நேரங்களில் அவர்கள் அடைய நினைக்கும் இலக்குகள் சாத்தியமற்றதாக தோன்றும். ஏனென்றால் மனிதர்களாகிய நாம் எந்நேரமும் உச்சகட்ட ஆற்றல் மற்றும் மனநிலையை பெற்றிருக்க முடியாது. இதற்கு தானும் விதிவிலக்கல்ல என்பதை மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவும் மோட்டிவேஷ்னல் வீடியோ ஒன்றை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வெளிப்படுத்தி இருக்கிறார். தொழிலதிபரானஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் ஊக்கமளிக்கும் மற்றும் சிந்தனையைத் தூண்டும் போஸ்ட்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வதை தவறாமல் கடைபிடித்து வருகிறார்.

இதனிடையே ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வீடியோ சுமார் 2 வருடங்களுக்கு முந்தைய பழைய வீடியோ என்ற போதும், எப்போது அதை பார்த்தாலும் ஊக்கத்தையும், உத்வேகத்தையும் தர கூடிய கன்டென்ட் அதில் அடங்கி இருப்பது தான் ஹைலைட். ஒரு குறுநடை போடும் குழந்தை கடினமான சுவரில் ஏற முயற்சிக்கும் பழைய வீடியோ கிளிப் ஒன்றை தான் தற்போது ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்து உள்ளார்.

Must Read | இரண்டு வண்ணங்களில் விண்டேஜ் தோற்றத்தில் அறிமுகமான கவாஸாகியின் புதிய பைக்! விலை எவ்வளவு தெரியுமா?

அவர் ஷேர் செய்துள்ள வீடியோவில், ஒரு குழந்தை பாறை போன்ற கடினமான சுவரில் ஏறும் முயற்சியில் ஈடுபடுகிறது. அந்த சுவரில் ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சிறு சிறு பிடிகளை தனது பிஞ்சு கைகளால் பிடித்து கொண்டு சுவரில் ஏற முயற்சிக்கிறது. அந்த குழந்தை துவக்கத்தில் சுவரின் மேலே செல்ல முயற்சிக்கும் போது பல தடைகளை எதிர்கொள்கிறது மற்றும் தடுமாறுகிறது. ஆனாலும் சுவரின் மேலே ஏறும் தனது முயற்சியை மட்டும் கைவிடவே இல்லை.

எப்படியும் தன்னால் சுவரின் மீது ஏறி மேலே சென்று விட முடியும் என்ற நம்பிக்கையில் சிறிதும் மனம் தளராமல் கரடுமுரடான பிடிகளில் தனது கை மற்றும் கால்களை பயன்படுத்தி தொடர்ந்து சுவரின் மீதேறி முன்னேறி கொண்டே செல்கிறது. இறுதியாக சுவரின் மீது ஏறி அங்கிருக்கும் சமதள பரப்பில் குடுகுடுவென்று அழகாக ஓடுகிறது. குழந்தையின் கடின முயற்சி இறுதியில் வெற்றி பெறுகிறது. ஒருபோதும் முயற்சியை கைவிட கூடாது என்று செயல்படும் அந்த குழந்தையின் செயல் மூலம் அதன் போராட்ட குணம் வெளிப்படுகிறது. அந்த குறுநடை போடும் குழந்தை சுவரின் உச்சிக்கு செல்லும் போது, "உங்களை நம்புங்கள்" மற்றும் "தொடர்ந்து செல்லுங்கள்" போன்ற ஊக்கமளிக்கும் சொற்றொடர்கள் வீடியோவில் தோன்றுகிறது.

https://twitter.com/anandmahindra/status/1457564998939463685

இந்த ஊக்கமளிக்கும் வீடியோவை ஷேர் செய்து இருக்கும் ஆனந்த் மஹிந்திரா, "இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது, ஆனால் இது எப்போதும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக எனது சில தனிப்பட்ட அல்லது வணிக இலக்குகளை அச்சுறுத்தலாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ உணரும் போது, இந்த அற்புதமான வீடியோவை பார்க்க நினைக்கிறேன். இதை பார்க்கும் போது என் பயங்கள் அனைத்தும் உடனடியாக போய்விடும்… என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த போஸ்ட் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமடைந்தது. இந்த வீடியோ தங்களுக்கு முழு உத்வேகத்தை அளிப்பதாக பல ட்விட்டர் யூஸர்கள் ஆனந்த் மஹிந்திராவிற்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர். நீங்களும் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து மனம் தளரும் போதெல்லாம் உங்களை புத்துணர்ச்சியாக்கி கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: