• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஆனந்த் மகேந்திரா கொடுத்த பிஸ்னஸ் அட்வைஸ் - டிவிட்டரில் வைரல்!

ஆனந்த் மகேந்திரா கொடுத்த பிஸ்னஸ் அட்வைஸ் - டிவிட்டரில் வைரல்!

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

தொழிலுக்கு மட்டுமல்ல குடும்ப வாழ்க்கை, பெண்களின் முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் இது பொருந்தும் எனக் கூறியுள்ளார்.

  • Share this:
நாய் குட்டியின் வைரல் வீடியோவை வைத்து பிஸ்னஸ் செய்பவர்களுக்கு, இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா டிப்ஸ் ஒன்று கொடுத்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவரை இம்ப்ரஸ் செய்யக்கூடிய தகவல்கள் மற்றும் வீடியோவை தவறாமல் பகிர்ந்து விடுவார். இப்போது, அவருக்கு பிடித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள ஆனந்த் மகேந்திரா, அதன்மூலம் பிஸ்னஸ் செய்பவர்களுக்கு சூப்பரான அட்வைஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

@claytoncubitt என்ற டிவிட்டர் யூசர், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நாய்க்குட்டியின் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், மரக்கதவுக்கு பின்னால் இருக்கும் நாய்க்குட்டி, கண்ணாடி இல்லாமல் வெறும் சட்டகமாக இருந்தாலும் அதன்வழியே வெளியே வர மறுக்கிறது. கண்ணாடி இருக்கிறதா? இல்லையா? என்று கால்களால் தொட்டுப் பார்க்க முயற்சி செய்யும் அந்த நாய்க்குட்டி, அதன் உரிமையாளர் கதவை திறந்த பின்னரே அந்த வழியாக வெளியேறும். இதனை பகிர்ந்த டிவிட்டர்வாசி, சில நேரங்களில் உங்கள் முன்னேற்றத்தில் இருந்து தடுக்கும் ஒரே விஷயம், முந்தைய கருத்தியல் கட்டமைப்பில் நீங்கள் இருப்பது தான் எனத் தெரிவித்திருந்தார்.



இந்த வீடியோவை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்துள்ள மகேந்திரா, அந்த நெட்டிசனின் கருத்தை ஆமோதித்து இருப்பதுடன், ஒரு பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதை இதைவிட விளக்குவதற்கு சிறந்த உதாரணம் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார். மேலும், இன்றைய தொழில் உலகில் சுதந்திரமாக இருக்க, எதற்கு விடைகொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்தக் கருத்தும், அந்த வீடியோவும் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரின் இந்த டிவிட்டுக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், ஒரு கூண்டுக்குள் அடைப்பட்டு இருப்பவரின் மனநிலை இப்படி தான் இருக்கும் என்றும், அதில் இருந்து விடுதலை பெற வேண்டுமானால் புதியதை முயற்சி செய்வதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொருவர், தொழிலுக்கு மட்டுமல்ல குடும்ப வாழ்க்கை, பெண்களின் முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் இது பொருந்தும் எனக் கூறியுள்ளார். ஒரே இடத்தில் நிலைபெற்று விட்டால், அதில் இருந்து வெளியேறக்கூட முயற்சிக்காமல், நம்பிய ஒன்று இருப்பதாக நினைத்து அங்கேயே தேக்கமடைந்துவிடுவோம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, நாம் எங்கிருக்கிறோம் என்பதை உணர்த்தும் வீடியோவாக இது இருப்பதாக மற்றொரு நெட்டிசன் கூறியுள்ளார்.

Also read... சாலை ஓரமாக பாடிய மியூசிக் ஸ்கூல் மாணவரை பாராட்டிய ஹிருத்திக் ரோஷன்!

ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த இந்த டிவிட்டர் மற்ற டிவிட்டர்வாசிகளும் தங்களது பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். கிரிட்கெட், சுற்றுலா உள்ளிட்ட சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய டிவிட்டர் அவர் கண்ணில் பட்டால்போதும், உடனடியாக தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்து விடுவதுடன், அதனைப் பற்றிய தகவல்கள் வேண்டுமானால் சமந்தப்பட்ட நபர்களிடமே கேட்டு தெரிந்து கொள்வார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: