Home /News /trend /

தந்திரமாக மீன் பிடிக்கும் சிறுவன் - Anand Mahindra ஷேர் செய்த வீடியோ.!

தந்திரமாக மீன் பிடிக்கும் சிறுவன் - Anand Mahindra ஷேர் செய்த வீடியோ.!

Anand Mahindra

Anand Mahindra

Anand Mahindra | மீன் பிடிக்கும் சிறுவனின் வீடியோ ஒன்றை டிவிட்டரில் ஆனந்த் மஹிந்திரா, இதனுடன் வெற்றிக்கான ஆலோசனைகளையும் கூறியுள்ளார்.

தொழில்துறையில் பிஸியாக இருக்கும் அதே சமயத்தில், சமூக ஊடகங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பவர் மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா. டிவிட்டரில் இவர் வைத்துள்ள அக்கவுண்ட்-ஐ 9 மில்லியன் நபர்கள் பின் தொடருகின்றனர். புத்தாக்க கண்டுபிடிப்புகளை எவர் செய்திருந்தாலும், அது தமது கண் பார்வைக்கு எட்டும்போது, அதை டிவிட்டர் மூலமாக பாராட்டுவார் ஆனந்த் மஹிந்திரா. அறிவார்ந்த கருத்துக்கள், இளைஞர்களை ஊக்குவிக்கும் செய்திகள் என பலவற்றை அவர் பகிர்ந்து கொள்வார்.

அதுபோல, அண்மையில், மீன் பிடிக்கும் சிறுவனின் வீடியோ ஒன்றை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா. அந்த செய்தி சொல்லும் சேதி இதுதான். இந்தியர்களுக்கு வயது ஒரு பிரச்சினையில்லை. பெரிய அளவுக்கு அறிவார்ந்த கல்வியை பயின்றிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தான் செய்யப் போகும் காரியம் தொடர்பான உத்திகளை தெரிந்து வைத்திருந்தாலே, நல்ல பலன் அடைய முடியும் என்ற உட்கருத்தை இந்த வீடியோ தாங்கி நிற்கிறது.

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து கொண்ட வீடியோவில் வரும் சிறுவன், மற்ற எல்லோரையும் போல தூண்டில் வீசி மீன் பிடிக்கும் முறையை தான் கையாளுகிறான். ஆனால், இதில் மற்றொரு உத்தியும் அடங்கியிருக்கிறது. அதாவது, தூண்டிலை வெகு தூரத்திற்கு தண்ணீரில் வீசி எறியவும், மீன் சிக்கிய பிறகு தூண்டில் நரம்பை அதிவேகமாக சுற்றி, மீனை கரைக்கு இழுத்து வரவும் தொழில்நுட்பம் கையாளப்படுகிறது. இந்த உத்தியில் சுமார் 2, 3 கிலோ கொண்ட 2 மீன்களை அசால்ட்டாக பிடித்து விடுகிறான் அந்த சிறுவன்.



இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, இதனுடன் வெற்றிக்கான ஆலோசனைகளையும் கூறியுள்ளார். அவரது பதிவில், “இந்த வீடியோ எந்தவித கருத்துகளும் இல்லாமல் எனது இன்பாக்ஸிற்கு வந்தது. இதில், ஒரு சின்ன செய்தி அடங்கியிருக்கிறது. அதாவது, மன உறுதி, புத்திசாலித்தனம் மற்றும் பொறுமை ஆகியவை இருந்தால் வெற்றி உறுதி என்பதையே இது காட்டுகிறது’’ என்று கூறியுள்ளார்.

Also Read : பெண்ணின் கூந்தலில் 84 நாட்களாக கூடு கட்டி வாழ்ந்த பறவை...

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து கொண்ட இந்த வீடியோ சுமார் 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அத்துடன் பல்லாயிரக்கானோர் லைக் செய்துள்ளனர். தேர்ந்த உத்தியை பயன்படுத்தி மீன்பிடிக்கும் சிறுவனை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.



இதேபோன்று சில நாட்களுக்கு முன்னதாக மற்றொரு பதிவு ஒன்றை ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டிருந்தார். அதில், கணவன், மனைவி இருவரும் ஒரு சின்ன இரு சக்கர வாகனத்தில், விற்பனை செய்வதற்கான சேர்களுடன் பயணிக்கும் ஃபோட்டோ இடம்பெற்றிருந்தது. மிக சிறிய இடத்தில் அதிகப்படியான பொருட்களை கொண்டு செல்வதற்கான எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது என கூறியிருந்தார் ஆனந்த் மஹிந்திரா.
Published by:Selvi M
First published:

Tags: Anand Mahindra, Trending, Viral Video

அடுத்த செய்தி