பனிப்பாறைகளுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நம் வாழ்நாளில் நேரில் பார்க்க இயலாது. பெரும்பாலும் அது கனவாகத்தான் இருக்க முடியும். அதே சமயம், சமூக வலைதளமான டிவிட்டர் மூலமாக இந்தக் காட்சியை காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா, தனது டிவிட்டர் பக்கத்தில் 360 டிகிரி கொண்ட வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
இயற்கையின் மிக அற்புதமான படைப்பை இந்த வீடியோவில் நாம் பார்க்க முடியும். லட்சத்தில் ஓரிருவருக்கு தான் இதை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும். நாம் வாழும் இந்தப் பூமியில் மிக உயரமான சிகரம் என்றால் அது எவரெஸ்ட் மலை தான். மலையேற்றத்தை விரும்பி செய்யும் வீரர், வீராங்கனைகளின் கனவு இது. மலையேறிய ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்தபடி 360 டிகிரியில் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா, அதனுடன் வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான செய்தி ஒன்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது பதிவில், “எவெரெஸ்ட் சிகரத்தில் இருந்து 360 டிகிரியில் எடுக்கப்பட்ட காட்சி இது. வாழ்க்கையில் முடிவு எடுக்க முடியாமல் நீங்கள் திணறும் சமயங்களில், உலகை எந்த தடையுமின்றி பார்ப்பதற்கு வழிவகை செய்யும் எவரெஸ்ட் சிகரத்தின் மீது நீங்கள் நின்று கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மாபெரும் காட்சியை பார்ப்பதுகூட எளிதாக மாறிவிட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ‘அமேசிங் நேச்சர்’ என்ற அமைப்பு சார்பில் டிவிட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதை சுமார் 4.6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருந்தனர். அதே வீடியோவை ஆனந்த் மஹிந்திர ரீ டிவீட் செய்திருந்தார். அவரது பதிவும் பல்லாயிரக்கணக்கான பார்வைகளை பெற்றிருப்பதுடன், 28,000 லைக்குகளைப் பெற்றுள்ளது.
Also Read : சிறுமியாக தூங்கியவர் இளம்பெண்ணாக எழுந்த சம்பவம்..
எவரெஸ்ட் சிகரத்தின் அழகை பார்த்து, நெட்டிசன்கள் பலர் மெய்மறந்தனர். இன்னும் சிலர், அந்த அழகான இயற்கை படைப்புடன், வாழ்க்கைக்கு தேவையான அற்புதமான அறிவுரையை வழங்கியிருக்கும் ஆனந்த் மஹிந்திராவை பாராட்டினர்.
இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட கமென்டில், “நீங்கள் (ஆனந்த் மஹிந்திரா) வாழ்க்கையின் உச்சத்திற்கு சென்றுள்ளீர்கள். வாழ்வில் முடியாதது எதுவுமே இல்லை என்பதை நிரூபித்துள்ளீர்கள். உங்களைப் பார்த்த பிறகு மலைகளையும், சிகரங்களையும் அடைவது சாத்தியமானதே என நான் உணர்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
Also Read : அகதியாக வந்த குடும்பத்திற்கு நினைத்த பார்க்கமுடியாத உதவியை செய்த நபர்..
யதார்த்த வாழ்வில் பார்க்க இயலாத காட்சி ஒன்றை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்திருப்பதாக மற்றொரு பதிவாளர் கூறியுள்ளார். இதுகுறித்து ஷஃபாலி ஆனந்த் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிறு வயதில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியை இமயமலையில் கழித்திருக்கிறேன். இமாலயா என்றால் சமஸ்கிருத மொழியில் பனி இல்லம் என்று பெயர்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.