Home /News /trend /

வார்த்தை இல்லை… ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குறித்த வைரல் வீடியோ

வார்த்தை இல்லை… ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குறித்த வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video : ட்விட்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களுக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களது உடல்கள் வைக்கப்பட்ட நிலையில் மூவர்ண கொடி போர்த்தப்பட்டது. இறந்த வீரர்களின் உடல்களை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதைத்தொடர்ந்து பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    இதனிடையே, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு, உலக நாடுகள் பலவும் இரங்கல் தெரிவித்துள்ளன. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பிபின் ராவத் அமெரிக்காவுக்கு ஒரு வலிமையான நண்பன் எனவும், இரு நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை அவர் மேற்பார்வையிட்டு வந்தார் என்றும் குறிப்பிட்டு உள்ளது. இந்தியா-ரஷ்யா இடையேயான சிறப்பான உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய ஒரு நெருங்கிய நண்பரை இழந்துவிட்டதாக, இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார். இதேபோன்று, பாகிஸ்தான், இலங்கை, பிரான்சு, நேபாளம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும், பிபின் ராவத்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் அஸ்தி இன்று ஹரித்துவாருக்கு கொண்டு செல்லப்பட்டு கங்கை நதியில் கரைக்க அவர்களது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதனிடையே தற்போது ட்விட்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.



    இது தொடர்பாக ஆனந்த் மகிந்திரா வெளியிட்டுள்ள வீடியோவில் , அரச மரத்தின் இலையில் பிபின் ராவத் உருவம் பொரித்தபடி அமைந்துள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி