Home /News /trend /

ஒரே சைக்கிளை ஓட்டும் 2 சிறுவர்களின் வீடியோ.. ஆனந்த் மஹிந்திரா ட்வீட் வைரல்

ஒரே சைக்கிளை ஓட்டும் 2 சிறுவர்களின் வீடியோ.. ஆனந்த் மஹிந்திரா ட்வீட் வைரல்

viral video

viral video

Anand Mahindra Twitter Video : ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா டீம் ஒர்க் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள சிறுவர்களின் வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.

இந்தியாவின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா சோசியல் மீடியாவில் படு சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. தனது பிசியான வேலைகளுக்கு நடுவிலும், திறமையாளர்களை பாராட்டுவதற்கும், இந்தியாவின் பெருமைகளை பறைசாற்றும் நிகழ்வுகளை பகிர்வதற்கும் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார். அதேபோல் சமூகத்திற்கு ஊக்கமளிக்க கூடிய வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமையன்று, அவர் ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, ஒத்துழைப்பு மற்றும் டீம் ஒர்க் பற்றி குறிப்பிட்டிருந்தார். ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோவில் இரண்டு சிறுவர்கள் சைக்கிள் மிதிப்பது பதிவாகியுள்ளது. சிறுவர்கள் சைக்கிள் ஓட்டி மகிழும் அந்த வீடியோவை வெறும் கேளிக்கை நிகழ்வாக மட்டும் கடந்து செல்லாமல், அதில் உள்ள உண்மையான விஷயங்களை சமூகத்தின் பார்வைக்கு ஆனந்த் மஹிந்திரா கொண்டு வந்துள்ளார்.

also read : எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஒருவர் பலி.. புதிய பைக் வாங்கிய மறுநாளில் நடந்த சோகம்..

அந்த வீடியோவில், ஒரே சைக்கிளை இரண்டு சிறுவர்கள் ஓட்டிச் செல்கின்றனர். இதில் என்ன பிரமாதம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் சிறுவர்கள் சைக்கிளின் இரண்டு பெடல்களிலும் நின்று கொண்டு, ஒருவர் மாற்றி ஒருவர் சரியான விசையில் அழுத்தி, சைக்கிளை முன்னோக்கி செல்ல வைக்கின்றனர். அதே நேரத்தில் பாலிவுட் படமான ஷோலேயின் புகழ்பெற்ற பாடல் 'யே தோஸ்தி ஹம் நஹி தோடேங்கே' பின்னணியில் ஒலிக்கிறது. சிறுவர்கள் ஒன்றாக சவாரி செய்வது மட்டுமல்லாமல், அவர்களின் முயற்சிகளால் வேகமாகவும் சைக்கிளை ஓட்டுவது பதிவாகியுள்ளது. தங்களது எடையை சரியாக சமநிலைப்படுத்துவதன் மூலமாக சைக்கிளை எவ்வித சிக்கலும் இன்றியும், அதே சமயத்தில் குழந்தை பருவத்திற்கே ஏற்ற குதூகலத்துடனும் ஓட்டிச் செல்கின்றனர்.இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா "ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் கூட ஒத்துழைப்பு மற்றும் டீம் ஒர்க் போன்ற நற்பண்புகளைத் தெரிவிக்க இப்படியொரு சிறந்த வீடியோவை கொண்டிருக்காது!" என பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவால் பகிரப்பட்ட சமீபத்திய வீடியோ ஏற்கனவே பல ரீட்வீட்களுடன் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ரீ-ட்வீட் மற்றும் 91 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.


also read : காளான் வளர்ப்பில் நாளொன்றுக்கு ரூ.40,000 வருமானம் பெறும் தாய் மற்றும் மகன்!

இதற்கிடையில், இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. "இது உண்மையில் குழுப்பணி, நட்பு, பிணைப்பு, நம்பிக்கை, மகிழ்ச்சி, படைப்பாற்றல், திறமை, புதுமை ஆகியவற்றை காட்டும் ஒரு சிறந்த வீடியோ” என ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது யூஸர்“அவர்கள் எவ்வளவு அழகாக சமநிலையை உருவாக்கி, தங்கள் ஆற்றலில் பாதியை பயன்படுத்து முன்னேறுகிறார்கள். எனவே டீம் ஒர்க் எனர்ஜியை சேமிக்கவும் மற்றும் சிறந்த முடிவை எடுக்கவும் உதவுகிறது” என பலரும் பல்வேறு வகைகளில் கமெண்ட் செய்து சிறுவர்களை பாராட்டி வருகின்றனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Anand Mahindra, Trending, Viral Video

அடுத்த செய்தி