ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கண்டெய்னரில் செட்டு போட்டு திருமணம்... ஆனந்த் மஹிந்திரா ரியாக்ஷன்

கண்டெய்னரில் செட்டு போட்டு திருமணம்... ஆனந்த் மஹிந்திரா ரியாக்ஷன்

நகரும் திருமண அரங்கு

நகரும் திருமண அரங்கு

Mobile Marriage Hall | சாமானிய வர்க்கத்தினருக்கு கை கொடுக்கும் வகையில் தற்போது புதியதொரு அரங்கு அறிமுகமாகியிருக்கிறது. இந்த திருமண அரங்கை நீங்கள் தேடிச் செல்ல தேவையில்லை. அந்த அரங்கு உங்கள் தெருமுனைக்கு அல்லது வீட்டு வாசல் வரையிலும் கூட வந்துவிடும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கலாச்சாரம் என்பதே எப்போதும் கொண்டாட்டங்கள் நிறைந்தது. ஒரு மனிதனின் பிறந்தநாள் விழா தொடங்கி, காதுகுத்து விழா, திருமண விழா, வளைகாப்பு விழா என வாழ்வின் ஒவ்வொரு அத்தியாத்திலும் வெவ்வேறு விதமான கொண்டாட்டங்களை இந்திய மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

முன்பெல்லாம் எந்தவொரு விசேஷம் என்றாலும் வீட்டிலேயே நடத்தும் அளவுக்கு இடவசதி இருந்தது. ஆனால், காலப்போக்கில் வீடு என்பது சின்ன அட்டைப்பெட்டி போல மாறி விட்ட நிலையில், இப்போதெல்லாம் சின்ன, சின்ன விசேஷங்களை ஏதேனும் அரங்குகளில் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எல்லோருக்கும் வீட்டுக்கு அருகாமையிலேயே அரங்கு கிடைப்பதில்லை. அத்துடன் சில அரங்குகள் நம் தேவைக்கு மிகுதியாக பெரிதாக இருப்பதால் வாடகையும் சற்று அதிகம். இப்படி கவலை கொள்ளும் நடுத்தர, சாமானிய வர்க்கத்தினருக்கு கை கொடுக்கும் வகையில் தற்போது புதியதொரு அரங்கு அறிமுகமாகியிருக்கிறது. இந்த திருமண அரங்கை நீங்கள் தேடிச் செல்ல தேவையில்லை. அந்த அரங்கு உங்கள் தெருமுனைக்கு அல்லது வீட்டு வாசல் வரையிலும் கூட வந்துவிடும்.

கண்டெய்னரில் திருமண அரங்கு :

சாதாரணமாக சினிமா சூட்டிங் மற்றும் அரசியல் தலைவர்களின் பிரசாரப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் கேரவேன்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு மினி வீடு போல சகல வசதிகளும் அதில் இடம்பெற்றிருக்கும். அதே உத்தியை பின்பற்றி, தற்போது திருமண அரங்கும் கூட வந்துவிட்டது. அதாவது 40 அடிக்கு 30 அடி என்ற கணக்கில் உள்ள கண்டெய்னரில் ஃபால் சீலிங், வண்ணமயமான விளக்குகள் என கண்ணைக் கவரும் வகையில் டெக்கரேசன் செய்து அரங்கு போல மாற்றி விட்டார்கள்.

Also Read : ஆதார் இல்லையென்றால் நோ என்ட்ரி.. உபி திருமண விழாவில் நடந்த கூத்து

அந்த கண்டெய்னரை தாங்கிய லாரி நாம் விரும்பும் இடத்திற்கே வந்து விடும். எல்லா அரங்குகளில் இருப்பதைப் போல, இங்கும் வரவேற்பறை தனியாக செட் செய்யப்படுகிறது. பின்னர் உள்ளிருக்கும் அரங்கத்தில் குளுகுளு ஏசி வசதியுடன் ஒரே சமயத்தில் 200 விருந்தினர்கள் வரையில் அமரும் அளவுக்கு இடவசதி உள்ளது.

டிவிட்டரில் டிரெண்டிங்

டிவிட்டரில் வெளியான இந்த நகரும் திருமண அரங்கு குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. சாமானியர்கள் முதல் பெரும் பிரபலங்கள் வரையில் இந்த தொழில்நுட்பத்தை வியந்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, புதுமையான எந்தவொரு விஷயத்தையும் டிவிட்டர் மூலமாக மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் ஆனந்த் மஹிந்திராவும் இந்த வீடியோவை பாராட்டியுள்ளார். அவரது பதிவில், “இந்த ப்ராடக்டின் டிசைன் மற்றும் யோசனைக்கு பின்னால் உள்ள நபரை நான் நேரில் பார்க்க விரும்புகிறேன். புதுமையானதாகவும், சிந்திக்க தூண்டுவதாகவும் உள்ளது.

சாதாரண பகுதிகளிலும் நிகழ்ச்சி நடத்துவதற்கான இடவசதியை வழங்குவதாக அமைந்துள்ளது. அத்துடன் மக்கள் நெருக்கடி மிகுந்த நம் நாட்டில் இடத்தை அடைத்துக் கொள்ளாமல் இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு நன்மை அளிப்பதாகவும் அமைந்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read : Flipkart-ன் பிக் பில்லியன் டே விற்பனையில் தந்தைக்காக லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - யார் மீது தவறு.?

இந்த வீடியோவை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். கால மாற்றத்திற்கு ஏற்ப இதுபோன்ற வசதிகள் தேவை என்று நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Published by:Selvi M
First published:

Tags: Anand Mahindra, Marriage Hall, Trending, Viral Video