அமெரிக்காவிலும் ’அடுக்கு டிபன் கேரியர்’ - ஆனந்த் மஹிந்திரா வியப்பு!

Anand Mahindra

அமெரிக்காவிலும் அடுக்கு டிபன் கேரியர் இருக்கிறதா?, அதனை பொதுவெளியில் எடுத்துச் செல்கிறார்களா? என்ற கோணத்தில், அந்த புகைப்படத்தை பார்த்து மஹிந்திரா தன்னுடைய வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

  • Share this:
அமெரிக்காவின் சென்ட்ரல் பார்க் அருகில் பெண் ஒருவர் அடுக்கு டிபன் கேரியரை எடுத்துச் செல்லும் புகைப்படத்தை பகிர்ந்து, இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா வியப்படைந்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவின் டிவிட்டர் பக்கத்தில் வித்தியாசமான, சுவாரஸ்யமான புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவரை பின் தொடர்ந்தீர்கள் என்றால், இத்தகைய தகவல்களை உடனடியாக பார்க்க முடியும். அண்மையில், அமெரிக்காவின் சென்ட்ரல் பார்க் அருகில் புல் பிளாக் பேண்ட் மற்றும் டீசர்ட் அணிந்திருக்கும் பெண் ஒருவர், இந்தியாவில் பிரபலமான அடுக்கு டிபன் கேரியரில் உணவு எடுத்துச் செல்கிறார். பார்ப்பதற்கு டிப்டாப்பாக இருக்கும் அந்தப் பெண்மணி, டிபன் கேரியரை எடுத்துச் செல்லும் புகைப்படத்தை பார்த்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வியப்படைந்துள்ளார்.அமெரிக்காவிலும் அடுக்கு டிபன் கேரியர் இருக்கிறதா?, அதனை பொதுவெளியில் எடுத்துச் செல்கிறார்களா? என்ற கோணத்தில், அந்த புகைப்படத்தை பார்த்து மஹிந்திரா தன்னுடைய வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் இந்தப் பதிவு நெட்டிசன்களிடமும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதுவரை சுமார் 16 ஆயிரம் லைக்குகளைக் குவித்துள்ளது. இந்தியாவில் நடத்தர மற்றும் விளிம்பு நிலை மக்கள் உணவு எடுத்துச் செல்ல அடுக்கு டிபன் கேரியரை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

Also Read: தாலிபான்களுக்கு ஆதரவு: அஷ்ரப் கனிக்கு அதிர்ச்சி தந்த அவரது சகோதரர்!

தற்போது நாகரீகம் கருதி, அந்த டிபன் பாக்ஸூகளை பிளாஸ்டிக் பைகள் அல்லது லெதர் பைகளுக்குள் வைத்து எடுத்துச் செல்கின்றனர். பெரும்பாலும், அடுக்கு டிபன் கேரியர் எடுத்துச் செல்லும் பழக்கமும் வேலைக்குச் செல்வோரிடைய குறைந்துள்ளது என்று கூட சொல்லலாம். பிளாஸ்டிக் பாக்ஸூகள் உள்ளிட்டவைகளில் மதிய உணவுகளை கொண்டு செல்கின்றனர். அதனால், இந்தியாவில் கூட பொதுவெளியில் அடுக்கு டிபன் கேரியர் எடுத்துச் செல்வது கடினமாகிவிட்டதால், அமெரிக்காவில் பெண் ஒருவர், அதுவும் பணக்காரர்கள் உலவும் பகுதியில் அடுக்கு டிபன் கேரியர் பெண் எடுத்துச் சென்றதை பார்த்ததும் நெட்டிசன்களுக்கும் வியப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read:  ஓலா S1 pro Vs ஏதெர் 450X: எது சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? – ஒரு முழுமையான ஒப்பீடு..

மஹிந்திராவின் போஸ்டுக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், இந்தியர்கள் எங்கு சென்றாலும் கலாச்சாரத்தை ஒருபோதும் மறக்கமாட்டார்கள் சார், இது அவர்கள் ரத்தத்திலேயே ஊறியது என கூறியுள்ளனர். இந்தியாவில் காண முடியாத அடுக்கு டிபன் கேரியர் அமெரிக்காவில் அதுவும் மல்லியனர்கள் உலவும் இடத்தில் ஒரு பெண் எடுத்துச் செல்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக தான் உள்ளது என மற்றொருவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனந்த் மஹிந்திராவைப் பொறுத்த வரை டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தனக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டதென்றால், தவறாமல் அதனை போஸ்ட் செய்துவிடுவார். மற்றவர்கள் யாரேனும் பகிர்ந்து, அந்த தகவல் தனக்கு தேவைப்பட்டால் அவர்களுக்கு மெசேஜ் செய்து கேட்டுத் தெரிந்து கொள்வார். இசை, விலங்குகள், டூரிஸ்ட் இடங்கள் என வெரைட்டியான பதிவுகள் ஆனந்த் மஹிந்திராவின் பக்கத்தில் பார்க்க முடியும்.
Published by:Arun
First published: