ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மார்வெல்லையே மிஞ்சும் ‘சூப்பர் ஹீரோ’ இவர் தான் - ஆனந்த் மஹிந்திரா ட்வீட்!

மார்வெல்லையே மிஞ்சும் ‘சூப்பர் ஹீரோ’ இவர் தான் - ஆனந்த் மஹிந்திரா ட்வீட்!

நடராஜன்

நடராஜன்

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோவில், நடராஜன் தனது வாகனத்தின் அருகில் நின்று கொண்டிருக்கிறார். “மட்கா மேன்” என்பது அவரது இணையதளத்தின் பெயர் ஆகும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

உலகின் டாப் 10 கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா நிறுவனம். இதன் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது வேடிக்கையான நிகழ்வுகள் குறித்து ஷேர் செய்து வருகிறார். அந்த வரிசையில் அலக் நடராஜன் என்பவரது செயலை ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். உத்வேகம் தரும் கதைகளைப் படிப்பது நல்ல ஒரு பாசிட்டிவ் ஆன எனெர்ஜியை உண்டாக்குகிறது. கதைகள் மட்டும் அல்ல, பார்க்கும் நிகழ்வுகள் கூட அப்படிதான். நம் வாழ்வில் சில சமயம் அசாதாரணமான மனிதர்களை பற்றி கேள்விப்படுவதுண்டு. அப்படிப்பட்ட ஒருவர் தான் அலக் நடராஜன்.

நடராஜன் டெல்லியில் வசித்து வரும் நிலையில், தற்போது டெல்லியில் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தினமும் குடிநீருக்காக பல்வேறு கிலோ மீட்டர்கள் வரை செல்லும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று யோசித்த நடராஜன், டெல்லி முழுவதும் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிநீரை வழங்க வேண்டும், அதுவும் ஏழை மக்களுக்கு என்று முடிவெடுத்தார்.

அதன்படி தற்போது வரை டெல்லி முழுவதும் 15க்கும் மேற்பட்ட தண்ணீர் ஸ்டாண்ட்களை அமைத்து மக்களுக்கு பேருதவி புரிந்து வருகிறார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ‘மஹிந்திரா’ நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, மார்வெல்லில் வரும் ஹீரோக்களின் சக்தியை விட, அதிக சக்தி வாய்ந்த ‘சூப்பர் ஹீரோ’ இவர் தான். நடராஜன் என்பது இவரது பெயர் ஆகும். இங்கிலாந்தில் தொழிலதிபராக இருந்தவர். புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த இவர் ஏழைகளுக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்தியா வந்தார். தற்போது ஏழைகளின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து, மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளீர்கள். உங்களின் சமூக சேவைக்கு நன்றி. மனதார பாராட்டுகிறேன் ஐயா என்று ஆனந்த் மஹிந்திரா கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோவில், நடராஜன் தனது வாகனத்தின் அருகில் நின்று கொண்டிருக்கிறார். “மட்கா மேன்” என்பது அவரது இணையதளத்தின் பெயர் ஆகும். மகாத்மா காந்தியின் பொன்மொழிகளை வண்டியின் இருபுறமும் எழுதி இருக்கிறார் நடராஜன். டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நட்ராஜனின் செயலை பாராட்டி வருகின்றனர்.

Also read... தார் கார் முழுவதும் அமிதாப் டையலாக் - நெகிழ்ந்துபோன ஆனந்த் மஹிந்திரா!

ஏற்கனவே இதேபோல, கடந்த மாதம் ஆனந்த் மஹிந்திரா கேரளா மாநிலம், கோழிக்கோட்டினை சேர்ந்த சிறுமி மெஹெக் பாத்திமாவின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தார். ஆறு வயதான சிறுமி மெஹெக் பாத்திமா கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Anand Mahindra, Natarajan