Home /News /trend /

உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு: தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வேதனை பதிவு!

உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு: தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வேதனை பதிவு!

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

Anand Mahindra : உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷ்யா முன்னேறி வரும் நிலையில், நாட்டிற்காக உக்ரைன் குடிமக்கள் பலரும் கையில் துப்பாக்கியுடன் போர்களத்தில் போராடி வருகின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் 3 நாட்கள் ஆகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வந்தாலும், ரஷ்யா எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் போரை முன்னெடுத்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் தலைநகர் கீவ் நகரம் பற்றி எரிகிறது. ரஷ்யா வான்வழி, தரை வழி, கடல் வழி என மும்முனை தாங்குதலில் இறங்கியுள்ளதால் உக்ரைனில் எங்கு திரும்பினாலும் மரண ஓலங்கள், துப்பாக்கி, வெடிகுண்டு சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

உக்ரைன் நாட்டு மக்கள் தங்களது உயிரை தற்காத்து கொள்வதற்காக மெட்ரோ ரயில் நிலைய சுரங்களிலும், பதுக்கு குழிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனை மறுக்கும் விதமாக இன்று வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், `தான் இன்னும் உக்ரைனில்தான் இருப்பதாகவும், ரஷ்யாவின் முதல் இலக்கு தானும் தனது குடும்பத்தினரும்தான் என்றும், உலக நாடுகள் போரை வேடிக்கை மட்டுமே பார்ப்பது வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பல்வேறு நாடுகளில் வசிக்கும் ரஷ்ய மக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவிற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். ரஷ்யாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. மறுபுறம் நேட்டா மற்றும் அமெரிக்கா தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்ப போவதில்லை என அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :  இந்தியாவின் 4 மூலைகளிலும் பிரம்மாண்ட அனுமன் சிலை கட்டும் தொழிலதிபர்... காரணம் என்ன?

இந்நிலையில் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷ்யா முன்னேறி வரும் நிலையில், நாட்டிற்காக உக்ரைன் குடிமக்கள் பலரும் கையில் துப்பாக்கியுடன் போர்களத்தில் போராடி வருகின்றனர். இதனால் உக்ரைனை விட்டு ஆண்கள் யாரும் வெளியேறக்கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். தனது குழந்தை பருவத்தில் பாகிஸ்தான் - இந்தியா இடையே நடந்த 2 போர்களை பற்றி குறிப்பிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா உலகம் இதுவரை எந்தப் பாடத்தையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

 



 

ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில்,

''எனது குழந்தை பருவத்தில் இரண்டு போர்களை கடந்திருக்கிறேன். 1965 மற்றும் 1971 வருடங்களில் மும்பையில் வான்வழி தாக்குதலுக்கு முன்பாக அபாய சங்கு ஒலிக்கும் போது முதுகுத்தண்டு சில்லிடும். இந்த சத்தம் அந்த பயங்கரமான நினைவுகளை மீண்டும் எழுப்பியுள்ளது. அபாய சங்கின் சத்தம் எனக்கு பயமுறுத்தக்கூடிய அந்தக் கனவுகளை எழுப்புகிறது. போர்களில் இருந்து இந்த உலகம் எதையும் கற்று கொண்டதாகத் தெரியவில்லை" என வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

 



 

மற்றொரு ட்வீட்டில், "மக்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்க மன உறுதியுடன் எதிர்த்து நின்றால், அது அணு ஆயுதங்களை விட சக்திவாய்ந்த சக்தியாகும். படையெடுப்பை சாத்தியமாகிறது, ஆனால் ஆக்கிரமிப்பு சாத்தியமற்றது” எனக்குறிப்பிட்டு, உக்ரைன் மக்கள் கையில் ஆயுதங்களுடன் போருக்கு புறப்படும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Anand Mahindra

அடுத்த செய்தி